Pages

Sunday 10 July 2011

23. வெற்றி தோல்வி ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையை வளர்த்தல்

வாழ்க்கை என்பது வெற்றியும் தோல்வியும்தான். அதில் இலாபமும் இருக் கும் நஷ்டமும் இருக்கும். இனிமையானவைகளும் இருக்கும் கசப்பானவைக ளும் இருக்கும். குழந்தைகள் பல்வேறுபட்ட நிகழ்வுகளை எதிர்கொள்கின்றார் கள். அவற்றிற்கேற்ப அவர்களது உணர்வுகள் நேர்மறையாகவும் எதிர்மறையா கவும் தாக்கமடைகின்றன. இது நாம் அவர்களுக்கு வழங்கும் பயிற்றுவிப்பைப் பொருத்தும் குடும்ப சமூக சூழலைப் பொருத்தும் அமைகின்றது.

பயிற்றுவித்தலில் மிக முக்கியமான விடயம் குழந்தைகளுக்கு வெற்றி தோல்விகளின் போது அழகிய முறையில் நடந்துகொள்வதற்கு பயிற்றுவிப் பதாகும். நாம் விடயங்களை சரியான அளவுகோள்களினூடாக அளவிட வேண்டும். 

எங்கள் குழந்தைகளை உயர்ந்த இலட்சியங்களுடன் இணைத்து விட வேண்டும். விளையாட்டுக்களில் அவர்களது கவனத்தை அதிகரித்து விடக்கூடாது.

குழந்தைகளை வெற்றி தோல்விகளின் போது சிறந்த முறையில் நடந்து கொள்ள பயிற்றுவிக்கும் போது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.

1. வெற்றி தோல்விகளின் போது நடந்துகொள்ள வேண்டிய முறைகள் பற்றிய செயல் ரீதியான முன்மா திரியை அவர்களுக்கு வழங்க வேண்டும். நாம் வெற்றியடையும்போது அதிகமான மகிழ்ச்சியையும் சந்தோசத்தையும் வெளிப் படுத்தக் கூடாது. அதேபோன்று நாம் தோல்வியடையும்போதும் அதிகமான கவலையையும் நஷ்டத்தையும் வெளிப்படுத்தக் கூடாது.

நாம் ஆதரவளிக்கின்ற ஒரு குழு வெற்றிபெறும்போது மிக அதிகமான சந் தோசத்தையும் தோல்வியடையும்போது அதிகமான நம்பிக் கையீனத்தையும் வெளிப்படுத்த முடியுமா? அவ்வாறாயின் எமது குழந்தைகளுக்கு வெற்றி தோல்வி பற்றிய எத்தகைய தெளிவை நாம் வழங்கப்போகின்றோம் என்பது கேள்விக்குறியே.

2. வீட்டில் குழந்தைகளைப் பயிற்றுவிக்கும்போது, விளையாட்டின்போது வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொள்ள வைப்பதில் நாம் அக்கறையுடன் செயற்பட வேண்டும். குழந்தைகளுக்கு எப்போதும் வெற்றிபெறக் கூடிய சந் தர்ப்பத்தை வழங்கக் கூடாது. மாற்றமாக ஒரு தடவை தோல்வி இன்னு மொரு தடவை வெற்றி என்றவாறு அமைத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் குழந்தை தான் தோல்வி யடைகின்றபோதும் நேசிக்கப்படு கின்றேன் என்பதை உணர வேண்டும்.

3. குழந்தைகளுக்கு கற்றலில் வெற்றிபெறுவதற்கான காரணங்களையும் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டும். இவற்றின் போது நியாய மான முறையில் நடந்து கொள்வதற்கும் அவர்களுக்கு வழி காட்ட வேண்டும். ஏனைய ஒருவர் வெற்றிபெறும்போது அவரை ஏற்றுக் கொள்ளக் கூடிய மன நிலையையும் அவருக்கு வாழ்த்துச் சொல்லக் கூடிய மனப்பக்குவத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

4. குழந்தைகள் தோல்வியடையும்போது கவலையடைவார்கள், இதன்போது அவர்களது உணர்வுகளைப் புரிந்து எமது அன்பையும் இரக்கத்தையும் வெளிப் படுத்த வேண்டும். அந்த சோக உணர்வை எவ்வாறு கடந்து செல்லலாம் என்பதற்கும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும். யதார்த்தத்தில் யாரும் தோல் வியை விரும்புவதில்லை.

5. குழந்தைகள் தோல்வியடைந்தால் அல்லது அவர்கள் ஆதரவளிக்கின்ற அணி தோல்வியடைந்தால் நாம் அவர்கள் வெற்றி பெற்ற சந்தர்ப்பங்களை அல்லது அவர்கள் ஆதரவளிக்கின்ற அணி வெற்றிபெற்ற சந்தர்ப்பங்களை ஞாபகப்படுத்த வேண்டும்.

6. குழந்தைகள் தோல்வியடைகின்ற சந்தர்ப்பங்களில் அவர்களை உற்சாகப் படுத்தவேண்டும். அல்லாஹ்வின் நாட்டத்தினால் அடுத்த தடவை உங்களால் வெற்றிபெற முடியும்போன்ற வார்த்தைகளினூடாக நம்பிக்கையை ஏற் படுத்த வேண்டும்.

7. எங்கள் குழந்தைகளுக்கு தோல்வியினால் உலகம் முடிந்து விடாது என்பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். றஸூல் (ஸல்) அவர்கள், வாழ்க்கையில் நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றி கற்றுத் தந்துள்ளார் கள்.

ஒரு தடவை றஸூல் (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை அறபி ஒருவரின் ஒட்டகம் முந்திச் சென்றுவிட்டது. அதனால் ஸஹாபாக்கள் கோப மடைந் தனர். றஸூல் (ஸல்) அவர்கள் தோல்வியை ஏற்றுக் கொண்டு புன்னகைத்த வாறு, தான் ஏற்படுத்திய உலக விடயத்தை உயர்த்தக் கூடிய உரிமை அல்லாஹ்வுக்கே இருக்கின்றது என கூறினார்கள்.

ஒரு நாளைக்கு வெற்றி கிடைக்கும் இன்னும் ஒரு நாளில் தோல்வி ஏற்படும். உண்மையான தோல்வி அல்லாஹ்வின் திருப்தியை இழந்து விடுவதாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்: அவனையன்றி நீங்கள் நாடியவற்றை வணங்குங் கள். நிச்சயமாக மறுமை நாளில் தனக்கும் தனது குடும்பத்தி னருக்கும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொண்டவர்களே நஷ்டவாளிகளாவர். அதுவே தெளிவான நஷ்டமாகும் என்பதை அறிந்துகொள்ளுங்கள் என்று நபியே நீர் கூறுவீராக. (ஸுமர்: 15)
உண்மையான வெற்றி அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுக் கொண்டு சுவனத்தில் நுழைவதாகும். அல்லாஹ் கூறுகின்றான்: யார் நரக நெருப்பை விட்டும் தூரமாக்கப்பட்டு சுவனத்தில் நுழைவிக்கப்படு கின்றாரோ, அவர் நிச்ச யமாக வெற்றி பெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை அற்பமான ஏமாற்றக் கூடிய இன்ப மேயாகும். (ஆல இம்றான்: 185)

8. குழந்தைகளை ஏனைய குழந்தைகளுடன் ஒப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் அவர்கள் தன்னம்பிக்கையை இழந்து விடுவார்கள். அத்துடன் அவர்களைத் தவிர ஏனையோர் மீது கோபம், வெறுப்பு கொள்வதற் கும் அது காரணமாக அமைந்துவிடும்.

9. குழந்தைகளுக்கு தோல்விகளின் போது நம்பிக்கை இழந்து விடாது தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும் என்பதற்கான கதைகளை கூற வேண்டும். உதாரணத்திற்கு தோமஸ் அல்வா எடிசன் கதையைக் கூறலாம். அவர் மின்விளக்கைக் கண்டுபிடிப்பதற்கு 999 தடவைகள் முயற்சித்தார். 1000 ஆவது தடவை வெற்றிபெற்றார். மக்கள் அவரிடம் நீங்கள் பலதடவைகள் தோல்வியடைந்துவிட்டீர்கள் என்றார்கள். அதற்கவர் அவை தோல்விகளல்ல. அவை அனுபவங்களும் படிப்பினைகளுமாகும். நான் மின்விளக்கைத் தயா ரிக்க முடியாத 999 வழிமுறை களை கற்றுக் கொண்டேன். அத்துடன் ஒரு வழிமுறையினூடாகத்தான் அதனைத் தயாரிக்க முடியும் என்பதனையும் கற்றுக் கொண்டேன்.

10. குழந்தைகளுக்கு கடந்த கால நிகழ்வுகளிலிருந்து மீண்டுவந்து புதிய அடைவுகள், வெற்றிகளை நோக்கி செல்வதற்கு கற்பிக்க வேண்டும். கவலை யிலும் சோகத்திலும் அத்துமீற வேண்டியதில்லை. அதே போன்று சந்தோசத் திலும் மகிழ்ச்சியிலும் எல்லை மீற வேண்டியதில்லை.
அல்லாஹ் கூறுகின்றான்: உங்களை கடந்து சென்றவற்றைப் பற்றி கவலைப் படாமல் இருப்பதற்கும் அவன் உங்களுக்கு வழங்கியவற்றைப் பற்றி (வரம்பு மீறி) மகிழ்ச்சி கொள்ளாதிருப்பதற்காகவும் (இதனை அறிவிக்கின்றான்) கர்வம் கொண்டு தற்பெருமை கொண்டோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. (ஹூத்:23)

11. சக்திகளைப் பயன்படுத்துவ தற்கும் வழிமுறைகளை எடுத்து நடப்பதற்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அத்துடன் முயற்சிக்கும் மனி தர் கட்டாயம் வெற்றிபெற வேண்டியதில்லை என் பதையும் கற்றுக் கொடுக்க வேண்டும். நிச்சயமாக மனிதனுக்கு அவன் முயற்சி செய்ததே கிடைக்கும். இன்னும் அவனுடைய முயற்சியின் விளைவுகள் (அவனுக்கு மறுமையில்) காண்பிக்கப்படும். பின்னர் மிக நிறைவான கூலி வழங்கப்படும். (நஜ்ம்: 39-41)

மனிதன் அவனது சக்திக்குட்பட்ட வகையில் முயற்சிக்க வேண்டும் என்பதே அவனிடம் எதிர்பார்க்கப்படுகின்றது. விளைவுகளைப் பொருத்தவரையில் இஸ் லாம் அதனை அவனுக்குப் பொறுப்புச் சாட்டவில்லை.

12. குழந்தைகளின் நாளாந்த செயற்பாடுகளின்போதும் ஏனைய நிலைகளின் போதும் அவர்களுடைய வெற்றிகளை, அடைவுகளை அல்லாஹ்வுடன் தொடர்புபடுத்தி விட வேண்டும். அல்லாஹ் மீது சத்தியமாக அவன் மீதே தவக்குல் வைத்தேன். அவனிடமே மீளுகின்றேன். (ஹூத்: 68)

13 ஒரு மனிதன் தனது முயற்சியை செலவிடுகின்றான். அவன் மீது கடமை யானவற்றை செய்கின்றான். என்றாலும் விளைவுகள் அவன் விரும்பியவாறு வருவதில்லை. இங்கு எமக்குத் தெரியாத அல்லாஹ் மட்டுமே அறிந்த நியாயமான காரணங்கள் இருக்கலாம். இதனையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்.

நீங்கள் வெறுக்கின்ற ஒரு விடயம் உங்களுக்கு சிறந்ததாக அமையலாம். நீங்கள் விரும்புகின்ற ஒரு விடயம் உங்களுக்கு தீமையாக அமையலாம். நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ் அறிகின்றான். (பகறா: 216)

14. குழந்தைகளுக்கு தமது சாதனைகள் வெற்றிகளின்போது எல்லை மீறி சந்தோசமடையக் கூடாது என்பதை கற்றுக் கொடுக்க வேண்டும். தனது திறமையினால் தான் ஏனை யவர்களைவிட உயர்ந்தவன் என்று கருதாமல் இருக்கவும் பயிற்றுவிக்க வேண்டும். அவர்களுக்கு காரூனின் கதையை தெளிவுபடுத்த வேண்டும்.
நிச்சயமாக காரூன் என்பவன் மூஸா (அலை) அவர்களின் சமூகத் தில் ஒருவனாக இருந்தான். அவர்கள் மீது அநியாயம் செய்தான். பலசாலிகளான ஒரு கூட்டத்தினரால் கூட சுமக்க முடியாத அளவு அவனது பொக்கிஷங் களின் சாவிகள் இருந்தன. அவர்களது சமூகத்தார் அவனிடம்; நீ அகம்பாவம் கொள் ளாதே. அகம்பாவம் கொள்வதை நிச்சயமாக அல்லாஹ் விரும்ப மாட் டான் என்று கூறியதை நினைவு கூறுவீராக.

தமிழில்: பௌஹானா நுஸைர்

நன்றி: ikhwanonline


source : www.meelparvai.net







No comments:

Post a Comment