Pages

Wednesday 6 July 2011

8. படி; போராடு; சேவை செய்...!

படி; போராடு; சேவை செய்...!

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பின் (SIO) சென்னை மாவட்ட மாநாடு 26.09.10 ஞாயிறன்று சென்னை அமைந்தகரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் பதிவு செய்யப்பட்ட சிறப்புரை ஒளிபரப்பப்பட்டது. அந்த சிறப்புரையிலிருந்து சில பகுதிகள்...

படி; போராடு; சேவை செய்...!

நீங்கள் இளைஞர்கள். இளைஞர்கள்தான் ஒரு சமுதாயத்தின் உயிர்நாடி, முதுகெலும்பு. ஒரு சமுதாயத்தின் முன்னேற்றம், மேம்பாடு என்பது இளைஞர்களின் முன்னேற்றம், மேம்பாடு ஆகியவற்றில்தான் தங்கி இருக்கிறது. அதனால்தான் எந்த ஒரு சமுதாயத்திலும் இளைஞர்கள் முக்கியத்துவப்படுத்தி நோக்கப்படுகிறார்கள். இளைஞர்கள் நலமாக இருந்தால் உலகமும் நலமாக இருக்கும். இளைஞர் சமுதாயம் சீர்கெட்டிருக்கும்போது மனித சமுதாயமே சீர் கெட்டுவிடும். அவர்களின் நிலை ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்போது முழு மனித சமுதாயத்தின் நிலையும் ஆரோக்கியமற்றதாக மாறிவிடும்.

உலகம் ஆரோக்கியம் பெற வேண்டுமானால் அனைவரின் கவனமும் இளைஞர்களின் மீது குவிக்கப்படுவது இன்றியமையாததாகும். அதுவும் குறிப்பாக, கல்வித் துறையில் ஈடுபாடுள்ள இளைஞர்களை இலக்காக வைத்து இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு மேற்கொண்டு வருகின்ற பணிகள் பாராட்டத்தக்கவை காத்திரமானவை. அதற்குரிய நற்கூலி அவர்களுக்குக் கிடைக்க வேண்டுமென நான் பிhர்த்திக்கின்றேன்.

அன்புக்குரிய இளைஞர்களே, நாளைய உலகம் நலமாக அமைவதற்கு இன்றைய இளைஞர்கள் அதிலும் மாணவர்கள் தமக்குள்ள கடமைகளை, பொறுப்புக்களை மிகச் சரியாக உணர்ந்து புரிந்து செயல்படவேண்டியது காலத்தின் தேவையாகும்.

இந்த வகையில் மாணவர்கள்இளைஞர்கள் தாம் நிறைவேற்ற வேண்டிய முக்கியமான மூன்று கடமைகளைப் பற்றி (படி, போராடு, சேவை செய்) புரிந்து கொள்ள வேண்டும். அந்த மூன்று கடமைகள் பற்றிய சில கருத்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று கருதுகிறேன்.

இளைஞர் சமுதாயம் முதலில் படிக்க வேண்டும். அவர்கள் துறை சார்ந்த வல்லுநர்களாய் மாற வேண்டும். சிறந்த புத்திஜீவிகளாய், வழிகாட்டிகளாய், சமூகத் தலைவர்களாய் மாற வேண்டும். மிக்க ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் கற்றலில் ஈடுபாடு காட்ட வேண்டும்.

உண்மையில் எந்த ஒரு நாட்டையும் எந்த ஒரு சமூகத்தையும் பொறுத்தவரை அந்தச் சமுதாயத்தில் இருக்கிற இளைஞர்கள் படித்தவர்களாய், புத்திஜீவிகளாய் தங்களை உருவாக்கிக் கொள்ளாதபோது அந்தச் சமுதாயம் எழுச்சி பெற முடியாது அந்த நாடு எழுச்சி பெற முடியாது. அதன் விளைவாக உலகம் சீராக முடியாது. குறிப்பாக நானும் நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த யுகம் 'அறிவு யுகம்' என்று வர்ணிக்கப்படுகிறது. எல்லாம் அறிவு மயப்படுத்தப்பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறNhம். எல்லாக் காலங்களிலும் செல்வங்களில் உயர்ந்த செல்வம் அறிவுச் செல்வம், கல்விச் செல்வம் என்று சொல்லப்பட்டபோதும் குறிப்பாக நீங்களும் நானும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம், எல்லாம் அறிவுமயப்படுத்தப்பட்ட காலமாக இருப்பதைத் தெளிவாகப் பார்க்கிறNhம்.

இன்று உற்பத்திக் காரணிகளில் முக்கியத்துவம் வாய்ந்த உற்பத்திக் காரணியாக அறிவு (நொலேஜ்) மாறி இருக்கிறது. ஒரு காலத்தில் நிதி மூலதனம், உழைப்பு, ஊதியம் முதலான உற்பத்திக் காரணிகள் பெற்ற முக்கியத்துவத்தை விடப் பன்மடங்கு முக்கியத்துவம் உள்ளதாக அறிவு மாறியுள்ளது. அதனால்தான் இன்றைய உலகில் முதன்மை பெறுபவர்களாக, ஜாம்பவான்களாக இருப்பவர்கள் 'நோலேஜ் வேர்க்கர்ஸ்' என்று சொல்லப்படுகின்ற அறிவுத்துறையிலே தேர்ச்சி பெற்றவர்கள்தாம் என்பதை நாம் அறிவோம். இன்றைய உலகில் செல்வந்த நாடுகளைப் பார்க்கிறபோது அந்த நாடுகளின் வருமானத்திலே 85 விழுக்காடு அறிவின் மூலம் பெறப்படுகிறது. ஒரு 15 விழுக்காடு வருமானம்தான் ஏனைய பாரம்பரிய உற்பத்திக் காரணிகளின் ஊடாகப் பெறப்படுவதை நாம் பார்க்கிறNhம். எனவே ஒரு சமுதாயம் முன்னேற வேண்டுமா, ஒரு சமுதாயத்தின் பொருளாதார நிலை சீராக வேண்டுமா, தார்மிக, ஆன்மிக, ஒழுக்கப் பண்பாட்டு நிலை சீராக வேண்டுமா அதற்கு வழி அந்தச் சமுதாயத்தின் இளைஞர்கள் படித்தவர்களாய் உருவாவதுதான். அது தவிர மாற்றுவழி கிடையாது. இன்றைய உலகமும் நாம் வாழும் சமூகங்களும் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை நாம் சிந்தித்துப் பார்க்கும்போது நாம் அடையாளப் படுத்தக்கூடிய மூன்று பிரச்சினைகளைப் பார்க்கிறNhம்.

இன்று உலகம் எதிர்கொள்கின்ற முதல் பிரச்சினை பொருளாதாரப் பிரச்சினைவறுமை. இரண்டாவது எதிர்கொள்கின்ற பிரச்சினை சுகாதாரம்நோய்கள். அடுத்ததாக ஆன்மிக, தார்மிக, ஒழுக்க, பாண்பாட்டுத் துறையில் காணப்படுகின்ற வீழ்ச்சி. இந்த முப்பெரும் பிரச்சினைகளுக்கான முதன்மைக் காரணம் சமூகம் கல்வித் துறையில், அறிவுத் துறையில் பின்னடைந்து காணப்படுவதுதான். அறிவு நிலை சீராகிவிட்டால், கல்வி நிலை சீராகிவிடும் சுகாதார நிலை சீராகிவிடும். ஒழுக்க நிலையும் சீராகிவிடும். அவ்வையார் எனும் பெண்பாற் புலவர் தம் காலத்தில் வாழ்ந்த மன்னரைப் பாராட்ட  விரும்பியபோது இரண்டே வார்த்தைகளில் பாராட்டினார். 'வரப்புயர'இவ்வளவுதான் சொன்னார். இதன் மூலம் அவர் என்ன செய்தியைச் சொன்னார்?



'வரப்புயர நீர் உயரும்
நீர் உயர நெல் உயரும்
நெல் உயர குடி உயரும்
குடி உயரக் கோல் உயரும்'

சமுதாயத்தின் கல்வி நிலை உயர, சமூகத்தின் அறிவு உயர எல்லாம் உயரும். பொருளாதாரம், சுகாதாரம், ஆன்மிகம், ஒழுக்கம், பாண்பாடு ஆகிய அனைத்தும் சீராகும். எனவே சமுதாயத்தில் ஒரு மாற்றம் வரவேண்டும், மறுமலர்ச்சி உருவாக வேண்டும், சமூகம் சீராக வேண்டும் என்று விரும்புகின்ற எவரும் சமூகத்தில் இருக்கின்ற இளைஞர்களைக் கல்வி கற்பதன்பால் ஊக்குவிக்க வேண்டும். பல்துறை சார்ந்த அறிஞர்களாக, புத்திஜீவிகளாக, வல்லுநர்களாக நமது நாளைய சமுதாயம் உருவாவதற்கு வழி காண நாம் கடமைப்பட்டிருக்கிறNhம்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரையில், அது இஸ்லாமிய மார்க்கம் இந்த உண்மையைமனித சமுதாயத்தின் முன்னேற்றமும் மேம்பாடும் அறிவு முன்னேற்றத்தில்தான் தங்கி இருக்கிறது என்ற கருத்தை மிகத் தெளிவாக வலியுறுத்துகின்ற ஒரு மார்க்கம்.

முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களைப் படைத்த இறைவன் அவருக்கு முதலாவதாகக் கொடுத்த அருட்கொடை அறிவுதான். ஆதத்தைப் படைத்த இறைவன் அவருக்கு எல்லாப் பொருட்களின் பெயர்களையும் கற்றுக் கொடுத்தான். அதாவது எல்லா விஞ்ஞானங்களின் அடிப்படை அம்சங்களையும் அவருக்குச் சொல்லிக் கொடுத்தான் என்று ஆல்குர்ஆன் சொல்கிறது.

மனிதனுக்கு முதன்முதலில் வழங்கப்பட்ட அருட்கொடையே அறிவுதான். இந்த உலகில் மனிதன் வாழ்வாங்கு வாழ்வதற்கு, தன்னுடைய கடமையைச் சீராக, சிறப்பாக நிறைவேற்றுவதற்கு அவனுக்குத் தேவைப்படுகின்ற முதலாவது தகைமையாக அறிவு இருக்கிறது. அறிவு இல்லாத ஒரு மனிதனால் இந்த உலகில் தன்னுடைய பங்களிப்பைச் சரியாக  முறையாக நிறைவேற்ற முடியாது.

இஸ்லாத்தின் இந்தத் தூதைஇறுதித் தூதை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தவர் முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள். அவர் இந்த உலகிற்குச் சொன்ன முதலாவது செய்தி என்ன? முக்கியத்துவப்படுத்தி, முதன்மைப்படுத்தி, முன்னுரிமை கொடுத்து முதலாவதாகச் சொன்ன செய்தி 'இக்ரஃ' ஓதுவீராக, படிப்பீராக எனும் செய்தியைத்தான் உலகிற்கு முதலாவதாகச் சொன்னார். அந்த முஹம்மத் நபியை விளித்து இறைவன் சொன்னான் 'இக்ரஃ' ஓதுவீராக. முதல் வசனமே படிப்பு பற்றியும் படிப்புக்கும் அறிவுக்கும் ஊடகமாக இருக்கும் பேனாவைப் பற்றியும் பேசுவதைப் பார்க்கிறNhம்.

குர்ஆனில் இரண்டாவதாக இறங்கிய வசனமும் மறிவு பற்றிப் பேசுவதைப் பார்க்கிறNhம். 'நூன் எழுத்தின் மீது சத்தியமாக, அந்தப் பேனாவைக் கொண்டு எழுதப்படுகின்ற புத்தகங்கள்  பதிவுகள்  ஆவணங்கள் மீது சத்தியமாக.'

உலகத்தைப் படைத்துப் பரிபாலித்துக் காப்பாற்றுகிற இறைவன் எழுத்தின் மீது சத்தியம் செய்யும் அளவுக்கு எழுத்து புனிதமானது. வல் கலம்பேனாவின் மீது சத்தியமாக என்று அடுத்துச் சொல்கிறான். பேனா அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அந்தப் பேனாவைக் கொண்டு எழுதப்படுகின்ற நூல்களின் மீது சத்தியமாக என்கின்றான் இறைவன். நூல்கள்பதிவுகள் அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை.

அந்த ஆறாம், ஏழாம் நூற்றாண்டு என்பது மனித இனம் அறிவு சூன்யத்தில் இருந்த காலம். முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் வாழ்ந்த அந்த அரபுத் தீபகற்பம் நூறுவீத அறிவுச் சூன்யத்தில் இருந்தது. எழுத வாசிக்கத் தெரிந்தவர்கள்கூட விரல் விட்டு எண்ணக் கூடியவர்கள்தாம். அறிவுக்கும் கல்விக்கும் எந்த முக்கியத்துவமும் இல்லாத காலத்திலே நபி முஹம்மத் அவர்கள் அறிவின் முக்கியத்துவத்தை, தேடலின் முக்கியத்துவத்தை, ஆய்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி முன்னுரிமை கொடுத்திருக்கிறார் என்று சொன்னால் மனித சமுதாயம் மறுமையில் வெற்றி பெற அறிவு எந்த அளவுக்குத் தேவை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

குர்ஆனில் 6666 வசனங்கள் இருக்கின்றன. இந்த வசனங்களிலேயே மிக நீளமான வசனம் எது தெரியுமா? கடன் கொடுக்கல்  வாங்கள் தொடர்பான விடயங்களை எழுத்திலே பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றிப் பேசுகின்ற வசனம். இந்த வகையில் குர்ஆன் எழுத்தின் முக்கியத்துவத்தைப் பெரிதும் வலியுறுத்துவதை நாம் பார்க்கிறNhம். எழுத்தும் படிப்பும் அந்த அளவுக்கு முக்கியமானவை.

பத்ர் யுத்தம் இஸ்லாமிய வரலாற்றில் இடம்பெற்ற முதல் போராட்டம். அந்தப் போராட்டத்திலே பலர் முஸ்லிம் அணியினரால் கைது செய்யப்பட்டார்கள். அந்தக் கைதிகளின் விடுதலைக்கு இடப்பட்ட நிபந்தனை என்ன தெரியுமா? அவர்களில் ஒவ்வொருவரும் எழுத்தறிவும் படிப்பறிவும் உள்ளவர்களாய் இருந்ததால் மதீனாவில் இருக்கின்ற பத்துக் குழந்தைகளுக்கு எழுதப் படிக்கக் கற்றுத்தர வேண்டும். கற்றுக் கொடுத்தால் அவர்களுக்கு விடுதலை கிடைக்கும். உலகில் எழுத்தறிவின்மையை ஒழிப்பதற்காக ஒரு சமுதாயத் தலைவர் மேற்கெண்ட முதலாவது நிகழ்ச்சித் திட்டமாக இது உள்ளது.

குர்ஆன் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் சிந்தனைக்கும் தேடலுக்கும் எந்த அளவுக்கு அழுத்தம் கொடுக்கிறது என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். சிந்திப்பதை குர்ஆன் அடிப்படையான மார்க்கக் கடமையாகக் கருதுகிறது.

மஹ்மூதுல் அக்காத் என்பவர் எகிப்து நாட்டைச் சேர்ந்த முக்கியமான அறிஞர். அவர் எழுதிய ஒரு நூலின் தலைப்பு 'அத்தப்கீரு பரீழதுன் இஸ்லாமிய்யதுன்'அதாவது சிந்திப்பது இஸ்லாமியக் கடமை. சிந்திப்பது குறித்து ஒரு நூலையே எழுதியுள்ளார். ஆய்வைத் தூண்டுகிற, ஆராய்சியைத் தூண்டுகிற சுமார் 35 வசனங்களைக் குர்ஆனில் நாம் காண முடிகிறது. இந்தப் பிரபஞ்ச அமைப்பைப் பற்றிப் பேசுகின்ற, அத்தாட்சிகளைப் பற்றிப் பேசுகின்ற, அறிவியல் உண்மை பற்றி விளக்குகின்ற சுமார் 750 வசனங்கள் குர்ஆனில் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறNhம்.

அறிவு, ஆய்வு, சிந்தனை, விளக்கம், புரிதல், விவேகம், ஞானம் போன்ற (அல்இல்மு, அல்அக்ல், அல்ஹிக்மா) சொற்கள் குர்ஆனில் மீண்டும் மீண்டும் பரவலாக இடம் பெற்றுள்ளன. யாருக்கு அறிவு ஞானம் கிடைக்கிறதோ அவர் மிகப் பெரிய நன்மையைநிறைவான நன்மையைப் பெற்றுக் கொண்டார் என்று குர்ஆன் கூறுகிறது.

குர்ஆன் இரும்பு பற்றிப் பேசுகிறது. இரும்பு எனும் ஓர் அத்தியாயமே இருக்கிறது. அதன் மூலம் உங்கறு கூறுகிறது. இரும்பு கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் இங்கிலாந்தில் தொழில் புரட்சியே ஏற்படடது. அதேபோல் புனித குர்ஆன் கப்பல் கட்டுவதைப் பற்றிப் பேசுகிறது. நபி நூஹ் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிப் பேசும்போது கப்பல் கட்டுவது பற்றிப் பேசுகிறது. நபி தாவூத் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும்போது இரும்புக் கவசங்கள் பற்றிப் பேசுகிறது. துல்கர்னைன் பற்றிப் பேசும்போது பெரும் அணைக்கட்டுகள் பற்றி குர்ஆன் பேசுகிறது.

முஸ்லிம் பெருமக்கள் பலர் மார்க்கத்துறை அறிஞர்களாய் இருந்த அதே சமயத்தில் பொது அறிவுத் துறையிலும் தேர்ச்சி பெற்றவர்களாய் இருந்தார்கள். உலகப் புகழ்பெற்ற முஸ்லிம் அறிஞர்கள் உருவாவதற்கு குர்ஆன் காரணமாய் இருந்ததை வரலாற்று ஏடுகளில் இருந்து நாம் புரிந்து கொள்ளலாம்.

ஆனால், அறிவும் ஆராய்ச்சியும் படிப்பும் வெறுமனே சர்டிபிகேட் ஒரியண்டட் ஆக, வெறுமனே ஜொப் ஓரியண்டட் ஆக, வெறுமனே 'மனி' ஒரியண்டட் ஆக அமைந்து விடுகின்றபோது அர்த்தமில்லாமல் போய்விடும். மனிதனை வெறும் பொருளாதாரப் பிராணியாக மாற்றுகின்ற கல்வியால் எந்தப் பயனும் இல்லை.

ஒரு மனிதனை மனிதப் புனிதமாக அறிவு மாற்ற வேண்டும். அப்போதுதான் அது அவனுக்கும் சமுதாயத்துக்கும் பயனுள்ள அறிவாக இருக்கும். எனவேதான் படிக்கிற மாணவர்களாகிய நீங்கள் வெறும் புரஃபஷனலுக்காகப் படிக்காமல் ஒரு மிஷனுக்காகப் படிப்பவர்களாய் மாற வேண்டும். இந்த விஷயத்தில் நமக்கு மிகச் சிறந்த ரோல் மொடல்அடையாள புருஷர் நபி சுலைமான் (அலை) அவர்கள்தாம். மிகப் பெரிய அறிவைப் பெற்றவராக, பஞ்ச பூதங்களையே வசப்படுத்தும் அறிவைப் பெற்றவராக அவர் இருந்தார். ஆனால் அவர் என்ன சொன்னார்?

'இந்த அறிவு, இந்தத் திறமை இறைவன் எனக்குத் தந்த மாபெரும் அருளாகும். நான் நன்றியுள்ள அடியானாக நடந்து கொள்கிறேனா, நன்றி கெட்ட அடியானாக நடந்து கொள்கிறேனா என்பதைச் சோதித்துப் பார்க்க இறைவன் எனக்கு இந்த அறிவை வழங்கியுள்ளான்' என்று கூறி மனிதகுல நன்மைக்காக உழைத்ததைப் பார்க்கிறNhம்.

துல்கர்னைன் எனும் அடியார் பற்றி குர்ஆன் சொல்கிறது. அவர் ஒரு பொறியியல் வல்லுநராக இருந்தார். அவருக்கு ஒரு பெரிய டெக்னொலஜி தெரிந்திருந்தது. அந்தத் தொழிநுட்பத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்காக, அநியாயக்கார சமுதாயத்திடமிருந்து காப்பாற்றுவதற்காகப் பயன்படுத்தினார். ஒரு பெரும் அணையைக் கட்டியெழுப்பினார். அவருடைய அறிவையும் ஆற்றலையும் கண்ட மக்கள் வியப்படைந்தனர். ஆனால் துல்கர்னைன் என்ன சொன்னார் தெரியுமா? பணிவுடனும் அடக்கத்துடனும் கூறினார்:

'இது என் இறைவன் எனக்குச் செய்துள்ள மாபெரும் அருளாகும். வாக்களிக்கப்பட்ட அந்த யுக முடிவு நாள் வரும்போது உங்கள் கண் எதிரே காணும் இந்த மாபெரும் அணையானது தூள் தூளாகிவிடும். நிச்சயமாக அந்த வாக்களிக்கப்பட்ட நாள் வரும்'

இப்படிப்பட்ட புத்திஜீவிகளும் அறிஞர்களும் வல்லுநர்களும் இன்றைய உலகிற்குத் தேவைப்படுகின்றார்கள். அறிவை வைத்து வயிறு வளர்க்கிற மனிதர்கள் அல்லர். சுயநலவாதிகளை உருவாக்குவதாகக் கல்வி அமைந்துவிடக் கூடாது. என் ஊருக்கு, நாட்டுக்கு, சமுதாயத்துக்கு, மனித  இனத்துக்கு எனது அறிவை வைத்து நான் சேவை செய்ய வேண்டும் என்ற உணர்வு பிறக்க வேண்டும். உலகத்திலே நன்மைகள் வளர்க்கப்பட வேண்டும். அதற்காகப் போராடுபவர்களாய் புத்திஜீவிகள், அறிஞர்கள் மாற வேண்டும்.

குறிப்பாக நானும் நீங்களும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலம் வெளிப்படையாகப் பார்க்கும்போது ஒரு வளமான காலமாகத் தெரிந்த போதிலும் இதற்கு மற்றொரு முகம் இருக்கிறது. அந்த முகத்தைப் பார்க்கிறபோது எவ்வளவு அவலட்சணமான முகம் என்பதை நாம் கவலையோடு அடையாளம் காண்கிறNhம். இன்று உலகில் பல்வேறு பிரச்சினைகள். ஒரு பக்கத்திலே அரசியல் நெருக்கடிகள். இன்னொரு பக்கத்திலே பொருளாதார மந்த நிலை. மற்றnhரு பக்கத்திலே சுகாதாரப் பிரச்சினைகள். இன்று உலகம் பிரச்சினைகள் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறது.

அன்புச் சகோதரர்களே, இந்த எல்லாப் பிரச்சினைகளுக்கும் பின்னால் இருப்பது 'மோரல் கிரைசிஸ்' ஒழுக்க வீழ்ச்சிபண்பாட்டு வீழ்ச்சி. படித்தவர்களிடமும் பண்பாடு இல்லை. மனித விழுமியங்கள் செத்துப்போன காலமாக இன்றைய காலம் இருப்பதைப் பார்க்கிறNhம். அநீதி அரசோச்சுகிறது. அராஜகம் தலைவிரித்தாடுகிறது. உலகின் பெரும்பாரான பிரச்சினைகளுக்குப் பேராசை, அத்துமீறல், அடாவடித்தனம், அராஜகம், சுயநலம், பிறர் நலனில் அக்கறை இல்லாத தன்மை இவைதாம் காரணமாக இருப்பதைப் பார்க்கிறNhம்.

எனவே, இன்றைய இளைஞர்களுக்கு, மாணவ சமுதாயத்திற்குப் பெரியதொரு பொறுப்பு இருக்கிறது. படித்தவர்கள் களத்திற்கு வர வேண்டும். இந்த உலகின் நிலையை மாற்ற வேண்டும். வரலாற்றில் தோன்றிய அடையாளபுருஷர்களை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் நன்மையை நிலைநாட்டுவதற்காக, தீமையை ஒழிப்பதற்காக 12 வயது முதல் போராட ஆரம்பித்தார். 12 வயதிலேயே சத்தியத்தைத் தேட ஆரம்பித்தார். 14 வயதில் நெருப்புக் குண்டத்தில் போடப்படுகிறார். தொடர்ந்து சத்தியத்தை நிலைநாட்ட நாடு நாடாய் அலைகிறார். புலம் பெயர்கிறார். போராடுகிறார். எத்தனை தியாகங்கள்! எத்தனை அர்ப்பணிப்புகள்!

நபி யூசுப் என்னும் இளைஞனைப் பற்றி அல்குர்ஆன் சொல்கிறது. ஓர் அத்தியாயமே அந்த இறைதூதர் பற்றிப் பேசுகிறது அவருடைய வாழ்க்கையைப் பற்றிப் பேசுகிறது. எத்தகைய தியாகியாய் அவர் இருந்தார். உலகிலேயே நல்ல மாற்றங்கள் வரவேண்டும் என்பதற்காக உழைத்தார். எகிப்து எனும் நாட்டை அவர் கட்டி எழுப்பினார். அரசின் பொருளாதார அநீதியை அவர் ஒழித்தார். ஒரு சீரான நாட்டை அவர் உருவாக்கினார். அதேபோல் நபி மூஸா எனும் அடையாளபுருஷரைப் பற்றி குர்ஆன் பேசுகிறது. இப்படி உலகில் நன்மைக்காகத் தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட முன்மாதிரி மனிதர்களைப் பார்க்கிறNhம். இவர்களை முன்மாதிரிகளாய்க் கொண்டு இந்த உலகைக் கட்டி எழுப்ப இளைஞர்கள் முன்வர வேண்டும்.


தொகுப்பு: ஜாவீத்

source : http://www.sheikhagar.org/









No comments:

Post a Comment