Pages

Friday 8 July 2011

9. வயோதிக காலத்தில் ரிஸ்க் அதிகரிக்க...துஆ

اللَّهُمَّ اجْعَلْ أَوْسَعَ رِزْقِكَ عَلَيَّ عِنْدَ كِبَرِ سِنِّي وَانْقِطَاعِ عُمُرِي

O Allah, make my sustenance the most plentiful during my old age and (at the time of the) terminating portion of my life. 

யா அல்லாஹ் என் வயோதிக காலத்தில் என் ரிஸ்கில் (இரணத்தில்) நீ பரக்கத்செய்வாயாக.

ஆமீன்
 
நம் அந்திம காலத்தில் ரிஸ்கில் பரக்கத்திற்காக வேண்டி ஒரு அருமையான து ஆவை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லிக்கொடுத்தார்கள்.  
 
இது நம் வயோதிக காலம் அடைந்து அதற்கு பிறகு ஒதவேண்டிய துஆ கிடையாது. நாம் நன்றாக சம்பாதிக்கும் போது ஒத வேண்டிய துஆ அப்பொழுதான் நம் வயோதிக காலத்தில் ரிஸ்க்கை எவரிடமும் வேண்டி நிற்காத நிலையில் அல்லாஹ் கொடுப்பான் (அது மகனாக இருந்தாலும் சரியே)
 
இன்னும் ரிஸ்க் என்பது வெறும் பொருளை வைத்துக்கொண்டிருப்பத்ற்கு மட்டுமல்ல அதை பயன்படுத்தி பிரையோஜம் அடைவதற்க்கும் உண்டான துஆ இது. இனறைய காலத்தில் எத்தனையோ பெரியவர்களை பார்க்கிறோம் அவர்களிடம் செல்வம் கொழிக்கிறது ஆனால் அவரால் எதையும் சாப்பிட முடியாது ஏன்? என்று கேட்டால் சுகர், BP , உப்பு என்று பதில் வரும்.
 
உயிர் உலத்தில் உள்ள வரை எந்த குறையும் இல்லாமல் எல்லாவற்றையும் சாப்பிட்டு வயோதிக காலத்தில் சந்தோசமாக வாழ்ந்து பிறறையும் வாழ வைக்கிற வாழ்க்கை உண்மையில் ஒர் உன்னதமான வாழ்க்கையன்றோ!!!!!
 
இப்படி நம் வாழ்வில் ஒளி ஏற்றிய நபிகள் மீது சொல்லுவோம் நாம் ஸலவாத்தை அனுதினம்.
 

- ஹஸனீ

No comments:

Post a Comment