Pages

Thursday, 15 December 2011

46. ஹஜ் 2012: மார்ச் 1 முதல் விண்ணப்பம், சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்

மார்ச் 1 முதல் ஹஜ் பயண விண்ணப்பங்கள் வினியோகம்:
ஹஜ் கமிட்டி அறிவிப்பு

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பம் எப்போது? ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற கடைசி நாள் 31-ந் தேதி ஆகும்.

ஏப்ரல் மாதம் கடைசி வாரம் குலுக்கல் நடைபெறும். ஹஜ் பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் மே மாதம் 31-ந் தேதிக்குள் கட்டணத்தை செலுத்திவிட வேண்டும்.

நாடு முழுவதும் 28 மையங்களில் செப்டம்பர் மாதம் 19-ந் தேதி முதல் அக்டோபர் 20-ந் தேதி வரை சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.

அக்டோபர் 26-ந் தேதி அராபத் நாள் ஆகும். ஹஜ் பயணத்தை முடித்து விட்டு நவம்பர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 10-ந் தேதி வரை விமானம் மூலம் நாடு திரும்பலாம்.

சர்வதேச பாஸ்போர்ட் கட்டாயம்
ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள திட்டமிடுவோர் இப்போதே சர்வதேச பாஸ்போர்ட் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த தகவலை அந்தந்த மாநில முதல்-மந்திரிகள் மூலமாகவும், மாநில ஹஜ் கமிட்டி தலைவர்கள் வாயிலாகவும் அறிவிக்கச் செய்துள்ளோம்.

கடந்த ஆண்டைப் போல இந்தஆண்டும் 70 வயது ஆனவர்களுக்கு குலுக்கல் இல்லாமலேயே அனுமதி வழங்கப்படும்.
அவருக்கு துணையாக ஒருவர் ஹஜ் பயணம் செய்யலாம்.

தமிழக கோட்டா அதிகரிப்பு
தமிழகத்திற்கான ஹஜ் பயணிகள் அடிப்படை கோட்டா இந்த ஆண்டு 11 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்காக முயற்சி மேற்கொண்டு வெற்றி ஈட்டித்தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி.

கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 442 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டார்கள். இந்திய ஹஜ் கமிட்டி எடுத்த சிக்கன நடவடிக்கை காரணமாக, ஹஜ் பயணச் செலவு ஒவ்வொருவருக்கும் தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.193 கோடி மிச்சமாகியது.

சென்ற ஆண்டு ஹஜ் பயணத்தின்போது மக்கா, மதீனா நகரங்களில் விடுதி கட்டணம் உயர்த்தப்படவில்லை. இந்த ஆண்டும் அதே கட்டணம்தான் வசூலிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஹஜ் பயணிகளுக்கான விமான கட்டணமும் அதிகரிக்கப்படவில்லை.

இந்தியாவில் இருந்து அழைத்துச்செல்லப்படும் ஹஜ் பயணிகள் வாடகை
கட்டிடங்களில்தான் தங்கவைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்கள் தங்குவதற்கு வசதியாக மெக்கா, மதீனா பெருநகரங்களில் ஹஜ் இல்லங்களை கட்டுவதற்கு இந்திய ஹஜ் கமிட்டி பரிசீலனை செய்து வருகிறது.

நடவடிக்கை உறுதி
ஒருமுறை ஹஜ் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் 5 ஆண்டுகள் கழித்தே மறு பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

வேண்டுவோர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதே இதன் நோக்கம் ஆகும்.

யாராவது இந்த விதிமுறையை மீறி 5 ஆண்டுகளுக்குள் மறு ஹஜ் பயணத்திற்கு முயன்றால் அவர்களின் பயணம் ரத்து செய்யப்படும். விமானத்திற்குள் சோதனையின்போது கண்டுபிடிக்கப்பட்டாலும் இதே நடவடிக்கை தான்.

அரசு கோட்டா மூலமான ஹஜ்பயணத்திற்கு மட்டுமல்லாமல் தனியார் நிறுவனங்கள் மூலம் பயணம் மேற்கொள்ள முயற்சி செய்வோர் மீதும் இதே நடவடிக்கை தான் எடுக்கப்படும்.

கர்நாடகாவில் ஹஜ் இல்லம்
எனது வேண்டுகோளை ஏற்று, கர்நாடகாவில் மாநில ஹஜ் இல்லம் கட்டுவதற்கு அம்மாநில முதல்-மந்திரி சதானந்தா கவுடா நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஹஜ் இல்லத்திற்கான அடிக்கல் நாட்டுவிழா 15-ந் தேதி மதியம் 12மணிக்கு பெங்களூர் ஹெக்டே நகரில் நடைபெற உள்ளது.
அதேபோல், பெங்களூர் தேவனஹல்லி – சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும் சாலையில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் 3.17 ஏக்கர் பரப்பளவில் கர்நாடகா அரசு சார்பில் ஹஜ் கர் என்ற ஹஜ் இல்லம் கட்டப்பட உள்ளது. இதற்கு இந்திய ஹஜ் கமிட்டி தன் பங்காக ரூ.21/2 கோடி வழங்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

by

Hasan

www.hajcommittee.com

Saturday, 10 December 2011

45. Alert : Wrong SMS sending, Calling peoples from this mobile numbers

Assalamu alaikkum (var..)

Alert Muslim Womens

Wrong SMS sending, Calling peoples from this mobile numbers

+91 7373167789
+91 9965620536
+91 8608488302
+91 8526382252
muslim name guys

So alert Your Wifes, Sisters and Daughters from this numbers

please forward to all

By

Hasan

Monday, 26 September 2011

44. மேலப்பாளையம் மாநகராட்சி உறுப்பினர்கள் - செய்வார்களா ?


மேலப்பாளையத்தில் தெருவில் ரோடு போடுகிறோம் என்று சொல்லி மழை தண்ணீர் தங்காத வகையில் முழுவதுமாக தாரை மெழுகி விட்டார்கள் . 

இதை மாநகராட்சி உறுப்பினர்களோ அல்லது மக்களோ அல்லது மக்களின் தலைவர்களோ கண்டு கொள்ளவில்லை . 

விளைவு :  மேலப்பாளையத்தில் நிலத்தடி நீர் இல்லாமல் போகி விட்டது. 

இதற்கு யார் காரணம்? திட்டமிடப்பட்டு இது செய்யப்பட்டதா?!. 

புதிதாக வரப்போகும்

 மாநகராட்சி உறுப்பினர் களுக்கு
 ஓர் வேண்டுகோள்: 

தாங்கள் மக்களின் நலன் கருதி பழைய ரோட்டை கிளறி தண்ணீர் தேங்கும் வகையில் மீண்டும் ரோடு போட்டால் இருக்கும் தலைமுறை, வரும் தலை முறை உங்களை வாழ்த்தும்! 







மேலப்பாளையத்தில் தெரு பெயர்கள் 
எழுத பட வேண்டும். 

இதை எல்லா ஊரிலும் 
மாநகராட்சி நிர்வாகமே செய்கிறது.

மேலப்பாளையத்திற்கு மட்டும் திருநெல்வேலி மாநகராட்சி ஏன் செய்ய வில்லை என்று தெரியவில்லை என மேலப்பாளையம் மக்கள் கேட்கிறார்கள்.




பெண்களின் இரவு தூக்கத்தை கலைக்கும் குடிநீர். 


ஆம். மேலப்பாளையத்தில் மாநகராட்சி வழங்கும் குடிநீர் பிடிக்க நிறைய தெருக்களில் பெண்கள் தங்களின் இரவு தூக்கத்தை தொலைத்து விடியற்காலை 3 மணிக்கு முழித்து தண்ணீர் பிடிக்கிறார்கள். 


ஏன் குடிநீர் வாரியம் தண்ணீர் பகலில் விடக்கூடாதா மேலப்பாளையம் மக்களுக்கு ? 


நிறைய தெருக்களில் தண்ணீர் வருவதில்லை. மாநகராட்சி உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் ? தொகுதி உறுப்பினர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் ? என்று தெரிவதில்லை என்று மேலப்பாளையம் பெண்கள் புலம்புகிறார்கள்.


மக்களின் கஷ்டங்களை புரிந்து அவர்களுக்கு உள்ள உரிமைகளை பெற்று தருவதற்காக வரும் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு தகுதியான ஆட்களை மக்கள் தேர்ந்தெடுப்பார்களா? பொறுந்திருந்து பார்ப்போம்.  


பதிவு : அப்துல் நாசர்,
செயற்குழு உறுப்பினர், 
மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை,
 மேலப்பாளையம்.

Monday, 5 September 2011

43. பிஸ்மில்லாஹ்....எதையும் ஆரம்பிக்கும் போது!

எதையும் ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் ......

பொதுவாக மக்கள் புதிதாக எதையேனும் துவங்கும்போது மங்களகரமான சில சடங்குகளைச் செய்வதை ஐதீகமாகக் கருதுகின்றனர். சிலர் அதன் மூலம் அக்காரியம் புனிதக் காரியமாக பரிணாமம் பெறும் என்ற நம்பிக்கை வைத்துள்ளனர்.

இன்னும் பலரது நோக்கம் பக்திப் பரவசத்திற்கும் புனிதத்திற்கும் அப்பால்
விரிகின்றது. அதாவது, துவங்குகின்ற காரியம் கைகூட வேண்டும், இலாபகரமாக அமைய வேண்டும், சுபமாக நிறைவுற வேண்டும், அபிவிருத்தி ஏற்பட வேண்டும், ஆனந்தமாக அமைய வேண்டும், இலக்குகளை அடைய வேண்டும் என்பன போன்ற ஆயிரமாயிரம் நோக்கங்கள் இந்த ஐதீகத்தின் பின்னால் இருக்கின்றன.

இந்த எதிர்பார்ப்புகளைச் சார்ந்த சடங்குகள் மதங்களையும் மொழிகளையும் நாடுகளையும் தாண்டி ஒருமைப்பட்டுக் கிடக்கின்றன. வார்த்தைகளும் அடையாளங்களும் வேண்டுமானால் வேறுபடலாம். சுழி(உ), சிலுவை, சங்கு, சக்கரம், லிங்கம், 786, பிறை-நட்சத்திரம் போன்ற நூற்றுக் கணக்கான வடிவங்கள் புழக்கத்தில் உள்ளன

இவ்வடிவங்களின் மூலமே இவற்றை உபயோகப் படுத்துபவர்கள் யாவர், எம்மொழியினர், எந்நாட்டைச் சார்ந்தவர் என்பவற்றையெல்லாம் பெரும்பாலும் அனுமானித்துவிடலாம்.

இந்த வழக்கம் கடவுள் நம்பிக்கை உள்ளவரிடம் மட்டும்தான் உள்ளது என்றும் சொல்வதற்கில்லை. இதில் புனிதமிருப்பதாக நாங்கள் கருதுவதில்லை என்று அவர்கள் கூறிக்கொண்டாலும் தங்களது கொள்கையை எடுத்த எடுப்பிலேயே வெளிப்படுத்துவதற்காக இவ்வழக்கத்தைக் கையாளுகின்றனர். அதாவது சங்கம், இயக்கம், கட்சி, நிறுவனம், அமைப்பு என இவர்களும் சில அடையாளங்களை அல்லது சுலோகங்களைப் பயன் படுத்துகின்றனர்.

அத்தனை எல்லைகளையும் தாண்டி எல்லோரிடமும் இந்தப் பழக்கம் பரவியிருப்பதற்குக்காரணம் 'துவக்கம்' என்ற சந்தர்ப்பத்திற்கு இருக்கின்ற மகத்துவம்தான். 'முதல்கோணல் முற்றிலும் கோணல்',
THE FIRST IMPRESSION IS THE BEST IMPRESSION' போன்ற பழமொழிகளும் இதiயே பிரதிபலிக்கின்றன. இந்த வழக்கத்தில் இஸ்லாத்தின் பங்கு என்ன என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் குறிக்கோள்.

எதையும் ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் இடம்பெற வேண்டும் என்பதே இஸ்லாத்தின் தெளிவான வழிகாட்டுதலாகும். திருமறை குர்ஆனுடைய துவக்கமே இதன் மூலம்தான் நிகழ்ந்திருக்கிறது என்பதே இதற்குப் போதுமான சான்றாகும்.

அதாவது முஹம்மத் நபி صلىالله عليه وسلم அவர்கள் ஹிரா என்னும் குகையிலே தனித்திருந்தபோது ஜிப்ரீல்அலைஹிஸ்ஸலாம் என்னும் வானவர் வந்து, இக்ரஃ பிஸ்மி ரப்பிகல்லதீ கலக் என்று கூறினார். படைத்த உமது இரட்சகனின் திருப்பெயரால் ஓதுவீராக! (பார்க்க அல்குர்ஆன்: 96:1)

இந்தச் சமுதாயத்தின் பிரச்சினை ளுக்குத் தீர்வாகவும் அன்றாட வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பகுத்தறிவிக்கக்கூடிய உறைகல்லாகவும், முக்காலச் செய்திகளையும் பொதிந்து வைத்துள்ள பொக்கிஷமாகவும் விளங்குகின்ற இறைமறையாம் திருக்குர்ஆனின் ஆரம்ப வசனமே அது.

அது இறைமறையின் ஆரம்ப வசனம் மட்டுமல்ல, அதுதான் முஹம்மத் என்ற தனி நபரை மனித சமுதாயத்தின் மாபெரும் வழிகாட்டியாக இறைவனின் தூதராக அங்கீகரிக்கிறது. இந்த உம்மத்திற்கான புதிய ஷரீஅத் (சட்டதிட்டத்)தின் தோற்றுவாயே அதுதான். அதன் துவக்கமே 'இறைவனின் பெயரால்...' என்று அமைந்திருக்கிறது. அதைவிட மிக முக்கியமாக
'ஓதுவீராக!' என்ற கூற்றின் மூலம் அவ்வாறுதான் துவங்க வேண்டும் என்று கட்டளையிடவும் செய்கிறது அந்த வசனம்.

எதையும் செய்ய ஆரம்பிக்கும்போது பிஸ்மில்லாஹ் - இறைவனின் நாமத்தால் என்று கூறிக்கொள்ள வேண்டும் என்ற கருத்தையும் இந்த வசனம் நமக்கு வலியுறுத்துகின்றது.அவ்வாறு வலியுறுத்தப்பட்ட சந்தர்ப்பங்களில் சிலவற்றை இங்குக் காணலாம்.

படிப்பதற்கு முன்:

*மேற்காணும் 96:1-ஆம் வசனம் எதையும் படிக்கும்போது இறைநாமம் கூற வேண்டும் என்று கட்டளையிடுகின்றது அதுபோக, குர்ஆனின் (தவ்பா 9-ஆம் அத்தியாயத்தைத் தவிர) எல்லா அத்தியாயங்களின் ஆரம்பத்திலும் பிஸ்மில்லாஹ் இடம் பெற்றுள்ளது.


எழுதுவதற்கு முன்:


ஸபா நாட்டு அரசிக்கு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எழுதிய கடிதத்தின் தொடக்கம் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர் ரஹீம் என்று அமைந்திருந்தது. (அல்குர்ஆன்: 27:30) நபி صلى الله عليه وسلمஅவர்கள் ரோமானியப் பேரரசர் ஹிர்கலுக்கு எழுதிய கடிதத்தில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று இருந்தது என இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் செய்தி புகாரீ - முஸ்லிமில் உள்ளது.

உயிர்ப்பிராணிகளை அறுக்கும்போது:


நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்ட (அறுக்கப் பட்ட மாமிசத்த)தையே புசியுங்கள்! (6:118) நபி **صلى الله عليه وسلم அவர்கள் உள்ஹிய்யா கொடுக்கும்போது பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக்கூறி அறுத்தார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
(புகாரீ - முஸ்லிம்)

உழூ செய்வதற்கு முன்:


'பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள்!' என நபி صلى الله عليه وسلم அவர்கள்
கூறினார்கள் என அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் ஹதீஸ் நஸயீயில் உள்ளது.

உண்பதற்கு முன்:


பிஸ்மில்லாஹ் கூறி உனது வலது கையால் உண்பாயாக! என நபி صلى الله عليه
وسلم அவர்கள் கூறினார்கள் என அம்ரிப்னு அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, அறிவிக்கும் தகவல் புகாரீ- முஸ்லிமில் உள்ளது.

 உண்ணும்போது பில்மில்லாஹ் கூற மறந்துவிட்டால் பிறகு
பிஸ்மில்லாஹி அவ்வலஹு வ ஆகிரஹு என்று கூறிக்கொள்ளட்டும் என நபி صلى الله عليهوسلم அவர்கள் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் செய்தி திர்மிதீ, அபூ தாவூதில் உள்ளது.

உறங்குவதற்கு முன்:


நபி صلى الله عليه وسلم அவர்கள் இரவில் படுக்கும்போது அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா (அல்லாஹ்வே! உனது நாமத்தால்..) என்று கூறுவார்கள் என ஹுதைஃபா (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (புகாரீ)

வாகனத்தில் ஏறும்போது:


நபி صلى الله عليه وسلم வாகனம் கொண்டு வரப்பட்டதும் அதில் ஏறும்போது அதில்
காலை வைத்ததும் பிஸ்மில்லாஹ் கூறுவார்கள் என அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (அஹ்மத், திர்மிதீ, அபூதாவூத்)

ஓதிப்பார்க்கும்போது:


ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி صلى الله عليه وسلم அவர்களிடம் வந்து, 'முஹம்மதே! நீங்கள் சிரமப்படுகிறீர்களா?' பிஸ்மில்லாஹி அர்கீக்க (அல்லாஹ்வின் பெயரால் உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கின்றேன்)... என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்.

யாருக்கேனும் காயமோ புண்ணோ இருந்து அதனால் சிரமம் ஏற்பட்டால் நபி
صلى الله عليه وسلم அவர்கள் தமது விரலால் (சைகை செய்தவர்களாக) பிஸ்மில்லாஹி...என்று ஓதுவார்கள் என ஆயிஷா (ரழி) அறிவிக்கும் ஹதீஸ் புகாரீ - முஸ்லிமில் உள்ளது. தமக்கு உடலில் வேதனை ஏற்பட்டு அதைப் பற்றி நபி صلى الله عليهوسلم அவர்களிடம் தாம் முறையிட்டபோது அன்னார், 'உமது கையை உமது உடம்பின் வேதனையுள்ள பகுதியில் வைத்து மூன்றுமுறை பிஸ்மில்லாஹ் ... கூறுவீராக!' எனத் தம்மிடம் கூறியதாக உஸ்மான் பின் அபில்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கும் செய்தி முஸ்லிமில் உள்ளது.


உடலுறவுக்குமுன்:


உங்களில் யாரும் தமது மனைவியிடம் உறவுகொள்ள நாடினால் பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம ஜன்னிப்னஷ்ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மாரஜக்தனா என்று ஓதிக்கொள்ளட்டும் என
நபி صلى الله عليه وسلم கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு
அறிவிக்கிறார்கள். (புகாரீ - முஸ்லிம்)

வீட்டிலிருந்து புறப்படும்போது:


ஒருவர் தமது வீட்டிலிருந்து புறப்படும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்த்து அலல்லாஹி லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹி என்று ஓதினால்.. என நபி صلىالله عليه وسلم அவர்கள் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (அபூ தாவூத், திர்மிதீ)

வீட்டில் நுழையும்போது:
ஒருவர் தமது வீட்டில் நுழைந்ததும் ..பிஸ்மில்லாஹி வலஜ்னா.. என்று ஓதட்டும் என நபி **صلى الله عليه وسلم கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ மாலிக் அல்அஷ்அரீரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத்.

இப்படிப் பல காரியங்களையும் துவங்கும்போது பிஸ்மில்லாஹ் கூறுவது இஸ்லாத்தில் வலியுறுத்தப்படுவதால் நாம் பிஸ்மில்லாஹ் கூறும் வணக்கத்தை வழக்கமாக்கிக்கொள்ள
வேண்டும்.

பிஸ்மில்லாஹ்வின் மகத்துவம்:

அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم குறிப்பிடுகிறார்கள்: அல்லாஹ்வின்
திருப்பெயரால்.. அவன் எத்தகையவன் எனில், அவனுடைய பெயர் (நினைவுகூரப்பட்டு) இருக்கும்போது இந்தப் பூமியிலோ வானங்களிலோ உள்ள எதுவும் (எந்தத்) தீங்கையும் ஏற்படுத்த முடியாது. அவனோ நன்கு செவியேற்பவனாகவும் மாபெரும் அறிஞனாகவும் இருக்கிறான். (அபூதாவூத், திர்மிதீ)

நீங்கள் இரவின் ஆரம்ப நேரத்தை அடைந்துவிட்டால் உங்களது குழந்தைகளை வெளியில் செல்லவிடாமல் தடுத்துக் கொள்ளுங்கள்! ஏனெனில் அப்போதுதான் ஷத்தான் பரவுகின்றான். சற்று நேரம் கடந்தபின் அவர்களை விடுங்கள். வாயில்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க! தோல் பைகளின் வாயைக் கட்டி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!... பாத்திரங்களை மூடி வையுங்கள், அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்க!

உங்களில் ஒருவருக்குப் பாத்திரத்தின் மீது வைப்பதற்கு ஒரு குச்சியைத் தவிர வேறு மூடி எதுவும் கிடைக்கவில்லையெனில் அதைப் பாத்திரத்தின்மீது அகலவாக்கில் வைத்து விட்டு அல்லாஹ்வின் பெயரைக் கூறிக்கொள்ள வேண்டும் என நபி صلى الله عليهوسلم அவர்கள் கூறிய தகவல் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு மூலம் முஸ்லிமில் பதிவாகியுள்ளது.

ஷைத்தானின் சேஷ்டைகளிலிருந்து பாதுகாப்புப் பெற இறைநாமம் அரணாக அமையும் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறதல்லவா?
உண்மையில் இறைநாமம் கூறப்படுவதால் உலகின் தீங்குகளை விட்டும் நாம் பாதுகாக்கப்படலாம் என்பது மட்டுமல்ல, பல நன்மைகளையும் பெறலாம். அவ்வாறு நபி صلىالله عليه وسلم அவர்கள் பெற்ற நன்மைகளுக்குப் பல சான்றுகள் உள்ளன.

அல்லாஹ்வின் திருநாமம் கூறப்படாத உணவை ஷைத்தான் தனதாக்கிக் கொள்கின்றான் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஹுதைஃபா (ரளி) நூல்: முஸ்லிம். அதாவது பிஸ்மில்லாஹ் கூறினால் அதில் பரக்கத் ஏற்படும். இல்லையாயின் அதில் அபிவிருத்தி இல்லாமற் போய்விடும்.

குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே இருந்த சந்தர்ப்பத்தில் நபி صلى الله عليهوسلم அவர்கள் பாத்திரத்தில் தமது கையை வைத்துக்கொண்டு பிஸ்மில்லாஹ் கூறி உழூ செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள். அப்போது தண்ணீர் அன்னாரின் விரல்கள் வழியாக புறப்பட்டு வந்தது. ஏறத்தாழ எழுபதிற்கும் மேற்பட்டவர்கள் அதில் உளூ செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு மூலம் நஸயீயில் உள்ளது.

இந்த அற்புதம் நபி صلىالله عليه وسلم அவர்களுக்கு அல்லாஹ் அளித்த அருட்கொடை என்பதைக் கடந்து அந்த அதிசயத்தில் நபி صلى الله عليه وسلم அவர்கள் பிஸ்மில்லாஹ்வைப் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதை மறுக்கவும் முடியாது.

கைமேல் பலன் கிடைக்கும் இந்த நன்மையைப் பற்றி நமது தாய்மார்களுக்கு நன்கு தெரியும். எனவேதான் தொழுகையில்கூட அக்கறையில்லாத பலபெண்கள் உலையில் அரிசியை இடும்போது பிஸ்மில்லாஹ் கூறத் தவறுவதில்லை.

எனவே எதையும் ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் கூறிக்கொள்ளும் பழக்கத்தை நாம் வழக்கமாக்கிக் கொள்வோம். அதன் மூலம் இம்மை - மறுமையின் பேறுகளை அடைவதற்கு உரித்தானவர்களாக நம்மை வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக!

இந்தத் தளத்தின் முதல் கட்டுரையே துவக்கத்தின் ஒழுங்கு பற்றி அமைந்திருப்பதும் மிகப் பொருத்தமாகவே உள்ளது.

பிஸ்மில்லாஹ் கூறாமல் துவங்கப்படும் எந்த நல்ல காரியமும் குறைவுடையதாகவே அமையும் என்ற கருத்தில் இப்னுமாஜா உட்பட பல நூற்களில் வந்துள்ள செய்தி பலவீனமானதாகும். (ஷைக் அல்பானீ ரஹ்மதுல்லாஹி அலைஹி, தமது இர்வாவுல் கலீல் என்னும் நூலில்) இது ஒரு தகவலுக்காக இங்கே தரப்பட்டுள்ளது.

- அப்துல் மஜீது உமரீ

1:1அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

96:1(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திரு நாமத்தைக் கொண்டு ஓதுவீராக


27:30நிச்சயமாக இது ஸுலைமானிடமிருந்து வந்துள்ளது; இன்னும் நிச்சயமாக இது: “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” என்று (துவங்கி) இருக்கிறது



Monday, 15 August 2011

மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை MIT


மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை


Melapalayam Improvement Trust

Website : www.melapalayamit.in


-----------------------------------

You name change and spelling mistake change possible

Name change in Tamilnadu Gazzette

Service Contact:
Mr. V.K.M. Mohamed Uthuman, Melapalayam
+91 7845915533


------------------------------------------------------

Monday, 8 August 2011

41. அறிவுப் பெட்டகம் குர்ஆனைக் பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?

அறிவுப் பெட்டகம் குர்ஆனைக் பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?



‘நிலம் வெளுக்க நீர் உண்டு மக்கள் மனம் வெளுக்க குர் ஆன் வேதமுண்டு’  என்று நானிலம் போற்றும் வள்ளல் நபி அவர்களுக்கு அறிவூற்றினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சந்தததியர் கல்வி கேள்வியில் பின்தங்கியிருக்கலாமா?

 ‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்று பகன்ற கோமான் நபி பொன்மொழியினை புறக்கணித்து கண்ணிருந்தும் மூடர்களாக ஆகலாமா?

 ‘கல்வி நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சொர்க்கத்தினை நோக்கி வீறு நடைபோடும் அடிச்சுவடு” என்ற வாக்கினை புறக்கணிக்கலாமா?

 500 ஆண்டுகள் ‘ஆண்ட சமுதாயம’; என்று பீற்றத் தெரிந்த நாம் மற்றவர்களுக்கு முன் மாதிரி ஆக திகழ வேண்டாமா?

போன்ற கேள்விகள் நான் மட்டும் கேட்க வில்லை. மாறாக இந்தியாவில் ஹைதராபாத் நகரிலுள்ள உருது பல்கலைக் கழகத்தின் சமூக புறக்கணிப்புகள் பற்றி பாடம் நடத்தும் இயக்குனர் மேன்மைமிகு கன்சன் இலையா என்பவரும் கேட்கிறார என்றால் அது நியாயம் தானே!.

கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ், ‘எந்த சமுதாயம் ஏன், எதற்கு, எப்படி, எதனால், யார், எப்போது’ என்ற கேள்விகள் கேட்கவில்லையோ அந்த சமுதாயம் பின் தங்கி தான் இருக்குமென்றார். 

ஒரு காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணி வேராக இருந்த முகம்மது அலி ஜின்னா, முகம்மது அலி, சவுக்கத் அலி, அலிஹார் பல்கலைக் கழகத்தினை நிறுவிய சர் செய்யத் அஹமது கான் போன்றோர் அறிவுசார் முஸ்லிம்களாக கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் கேள்விப்படாத சில முஸ்லிம் அறிஞர்களும் இருந்திருக்கின்றனர். 

உதாரணத்திற்கு பிரிட்டிஷ் கலெக்கெட்டராக இருந்த ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வழக்கில் தீர்ப்புச் சொன்ன ஐந்து நீதிபதிகளில் ஒரு நீதிபதி அப்துல் ரஹீம் ஆகுமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
புpரிட்டிஷ் ஆஷ் துரைதான் வா.உ.சி அவர்கள் சுயாட்சி கப்பலினை தூத்துக்குடி கடலில் செலுத்திய போது தடுத்து நிறுத்தி அட்டூழியம் செய்தவர். அவர் தன் மனைவியுடன் சென்ற போது மணியாச்சி ரயில் நிலையத்தில் தியாகி வாஞ்சி நாத அய்யரால் கொலை செய்யப் பட்பவர். அந்த வழக்கில் சுப்ரமணி பாரதி ஆகியோர் குற்றஞ் சாட்பப்பட்டனர். 

அந்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் மூவர் ஆங்கிலேயர். ஒருவர் பி.ஆர். சுந்தர ஐயர் மற்றமொருவர் தான் நீதிபதி அப்துல் ரஹீம் அவர்கள். அந்த வழக்கில் ஆங்கிலேய நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தாலும், இன்னொரு நீதிபதியான பி.ஆர். சுந்தர ஐயர் குற்றவாளிகளின் குற்றத்தில் சந்தேகம் எழுப்பினாலும், அவர்களை நிரபராதி என்று தைரியமாக சொல்லவில்லை. 

ஆனால் நீதிபதி அப்துல் ரஹீம் மட்டும் தைரியமாக அந்த குற்றவாளிகள் நிரபராதிகள் என்றும், நாட்டுக்காக போராடும் வீரர்கள் என்றும் மறுப்பு தீர்ப்பினை தைரியமாக வழங்கினார். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால் அப்படி கல்வி, கேள்வியல் சிறந்து விளங்கி ‘எப்படியிருந்த நாம் இன்று பின் தங்கி இருப்பதிற்கு’ காரணம் என்ன என்ற அறிய வேண்டும் என்பதிற்குத் தான் மேற்கொண்ட எடுத்துக் காட்டுதல் ஆகும்.


இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஆரம்ப காலத்தில் மாறிய முஸ்லிம்கள் இந்திய ஜாதீய சமுதாயத்தில் அடித்தளத்திலிருந்த மக்களும், தலித்துகள் தான் என்று சொல்லப்படுகிறது. இந்து தலித்துகளுக்கு அரசியல் சாசனத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஏழை முஸ்லிம்களுக்கு அவ்வாறு எந்த உறுதியும் செய்யப்படவில்லை.. அதனால் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் போது, அப்படி முஸ்லிம்கள் படித்திருந்தாலும் வேலை உத்திரவாதமில்லை. தலித்துகள், பழங்குடியினர், மற்ற பிற்பட்ட ஜாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க முன்னுரிமை கொடுக்கின்றனர். 

ஆனால் கிராமப்புற ஏழை முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை குர்ஆன் ஓத மட்டும் முன்னுரிமை கொடுக்கின்றனர். 3.8.2011 சகர் நேர தொலைக் காட்சியில் பேசிய வளைகுடா வாழ் என்ஙினீயர் ஒருவர் சொல்லும் போது, ‘அவரிடம் வேலை பார்க்கும் ஒரு பிளம்பர் அவரிடம் தன் மகன் தமிழ்நாட்டில் எட்டாவது படிப்பதாகவும் ஏதாவது பிளம்பர் வேலை போட்டுக் கொடுத்தால் போதும் அவனை வளைகுடாவிற்கு அழைத்துக் கொள்வேன்’ என்ற கொன்னாராம். அவருக்கு புத்திமதி சொல்லி அவர் மகனை மேல் படிப்பு தொடர்ந்து படிக்க வையுங்கள் என்றாகவும் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்தார். இது எதனைக் காட்டுகிறது என்றால் பிள்ளைகள் படித்தாலும் வேலை கிடைக்குமா என்ற உண்மையான பயம் முஸ்லிம்கள் மனதில் இருப்பதினைக் காட்டவில்லையா?

அமெரிக்கா இரட்டைக் கோபுர இடிப்பிற்குப் பின்னரும், மும்பை தீவிரவாத தாக்குதல் பின்னரும் முஸ்லிம் குழந்தைகளை இங்கிலிஸ் பள்ளியில் சேர்ப்பதிலும், முஸ்லிம்களுக்கு வீடு கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று பல்வேறு மக்களும், பிரபல நடிகர் சாருக்கான், நடிகை ஷாபனா ஆஸ்மி கூட சொல்லியுள்ளார்கள் என்றால் பாருங்களேன் சாதாரண முஸ்லிம்கள் என்ன பாடுபடுவார்கள் என்று.

ஹிந்து ஜெயின் வியாபாரிகள் தங்கள் குழந்தைகளை எப்படியும் மேல் படிப்பிற்கு அனுப்பி அதன் மூலம் தங்கள் வியாபாரத்திற்கு உதவியாக அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம் வியாபாரிகள் கூட தங்கள் குழந்தைகளை மேல் படிப்பிற்கு அனுப்புவதில்லையே அது ஏன்?

2001 கணக்கெடுப்பின் படி கல்வியறிவு பெற்ற முஸ்லிம்கள் 60 விழுக்காடுகள் ஆகும். ஆனால் கல்வி கற்ற ஹிந்துக்கள் 75.5 சதவீதமாகும், கிருத்துவர்கள் எண்ணிக்கையோ 90.3 சதவீதமாகும். நம்மைப்போன்ற மைனாரிட்டி சமூகம் என்ற கூறிக் கொள்ளும் சீக்கியர்கள் கல்வியறிவில் 70.4 விழுக்காடும், புத்தர்கள் 73 விழுக்காடும், ஜெயின்கள் 95 சதவீதமாகமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

கிருத்துவர்களும், ஜெயின் மக்களும் தங்கள் மக்களுக்கு தரமான உயர்கல்வியினை தன்னலமற்ற கல்வி நிலையங்களை அமைத்து அவர்கள் மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம் தன்வந்தர்கள் வசதி வாய்ப்பிலிருந்தும் கல்வி நிலையங்களை அமைத்து நாலு காசு பண்ணும் கல்வி நிலையங்களாக மைனாரிட்டி கல்வி நிலையங்கள் என்ற தோரணையில் அமைத்து ஏழை முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். 

 சில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை லகர டொனேசன் பெற்றல்லவா நியமிக்கிறார்கள். எங்கே சொல்வது இந்த வேதனையை!
பின் எங்கே முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறி சமுதாயத்திலும் முன்னேற  முடியும்?

நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை ‘ஒரு புனித அறிக்கை இல்லை’ என்று சமீபத்தில் சென்னை வந்த முஸ்லிம் மத்திய அமைச்சர் சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

ஆனால் அந்த அறிக்கை புனித அறிக்கையோ இல்லையோ தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த அறிக்கையால் இந்தியாவில் முஸ்லிம்கள் எந்தளவிற்கு கல்வி, வேலை, சமூக அமைப்பில்; பின்தங்கி ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பது உலகிற்கு எடுத்துக்காட்டிய வால் நட்சத்திரமாக தெரியவில்லையா?


அந்த அறிக்கையில்  முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 12 மாநிலங்களில் 15 சதவீதம் பேர்கள் முஸ்லிம்கள். ஆனால் அரசு வேலையில் அவர்கள் பெற்ற வாய்ப்போ 5.7 விழுக்காடுதான்.  

போலீஸ், நிர்வாகம், வெளிநாடுகளிலுள்ள தூதரக அலுவலகங்களில் அவர்களுக்குள்ள வாய்ப்பு 1..6 விழுக்காடிலிருந்து 3.4 விழுக்காடு தான் என்றும், நீதித்துறையிலும், ராணுவத்திலும் மிக, மிகக் குறைந்த அளவே பணியாற்றுகிறார்கள் என்றும் சொல்லியுள்ளது. 

அது மட்டுமா உளவுத்துறையான ஐ.பி, ரா, என்.எஸ்.ஜி போன்ற அமைப்புகளில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பே இல்லை என்றே சொல்லலாம். 

இந்தத் தருணத்தில் ஒரு உதாரணத்தினை மட்டும் உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கின்றேன். 1981ஆம் ஆண்டு நான் வண்ணாரப்பேட்டை ஏ.சியாக பணியாற்றியபோது டி.ஜி.பியாக டி.டி.பி. அப்துல்லா அவர்கள் பணியாற்றினார்கள். 

நான் அவரிடம் ஒரு மனுவினைக் கொடுத்து  மாநில எஸ்.பி.சி.ஐ.டியில்(உளவுத்துறை) பணியாற்ற விருப்பம் தெரிவித்தேன். அவரும் அந்த மனுவினை பரிந்துரை செய்ய அப்போதிருந்த உளவுத்துறை தலைவரிடம் தொலைபேசியில் கருத்துக் கேட்டார். அதற்கு அந்த உளவுத்துறை தலைவர் ‘முஸ்லிம்களை எஸ்.பி.சி.ஐ,டியில் போடுவதில்லை’ என்ற மறுத்து விட்டார். 

அதன் பின்பு டி.ஜி.பி அவர்கள் என்னை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி;யாக பணியமர்த்தினார். இது எதனைக் காட்டுகிறது என்றால் ஒரு மாநில் டி.ஜி.பியாக உள்ள ஒரு முஸ்லிம் அதிகாரியாலேயே ஒரு மாநில உளவுத்துறையில் ஒரு முஸ்லிம் டி.எஸ்.பிக்கு பதவி பெற முடியவில்லை என்றால் இந்திய அளவில் அவர்கள் பங்கு எப்படியிருக்கும் என்று உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
 
சரி இஸ்லாமியர் பங்களிப்பு அரசு உயர் பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பீ.எஸ், ஐ.எப்.எஸ் மற்றும் மத்திய பதவிகளின் நிலை என்ன என்பதினை ஆல் இண்டியா மில்லி கவுன்சில் அப்போதிருந்த பிரதமரிடம் 1998 ஆம் ஆண்டு அளித்தது. அதில் 3883 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 116 தான், 1433 ஐ.பீ.எஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 45 தான், 2159 ஐ.எப்.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 57 பேர்கள் தான். 

ஆகவே முஸ்லிம்கள் உயர் பதவிகளில் வெறும் 3 விழுக்காடுகளுக்குள் தான் இருந்திருக்கிறார் இப்போதும் இருக்கிறார்கள். 
 
முஸ்லிம்கள் நலனுக்காக கோபால் சிங் கமிட்டி, மிஸ்ரா கமிட்டி மற்றும் சச்சார் கமிட்டி போன்றவைகள் அமைத்தும் இன்னும் அந்த கமிட்டிகளின் பரிந்துரைகள் காற்றுப்பட்டு இருகிய சிமிட்டிகளாகவே பயனற்று உள்ளன. 

ஆனால் முஸ்லிம்கள் வாழ்க்கைத்தரம் மற்றும் மாற வில்லை. அந்த மாற்றம் தர வேண்டுமென்றால் முஸ்லிம்கள் தங்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும். உயர் கல்விக்காக அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதனை பெற்று நாமும் நம் சமுதாய மக்களுக்கு உயர் கல்வியினை வழங்க வேண்டும்.

 27 விழுக்காடு ஒ.பி.சி ஒதுக்கிட்டில் முஸ்லிம்களுக்கென்று தனி ஒதுக்கீடு பெற முயற்சி செய்ய வேண்டும். தற்போது உச்ச நீதி மன்றத்தில் ஒபிசி 27 சதவீத ஒதுக்கீடு பற்றிய வழக்கில் இணைத்துக் கொண்டு புள்ளி விபரங்களை அளித்து முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு பெற முயல வேண்டும்.

அலிகார் முஸ்லிம் பல்பலைக்கழகத்தினை முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டுமென்ற 144 வருடத்திற்கு முன்பு சர் செய்யத் அஹமது கான் 1867ஆம் ஆண்டு நிறுவினார். அந்த பல்கலைக் கழகம் அலிகாரை விட்டு எந்த இடத்திலும் கல்வி நிலையங்கள் அமைக்கவில்லை. 

ஆனால் கேரள மலப்புரம் முஸ்லிம்கள் முயற்சியல் சச்சார் கமிட்டியில் உள்ள பின்தங்கிய முஸ்லிம் மாவட்டங்களை கல்வியில் முன்னேற்றும் திட்டத்தில் மாநில-மத்திய அரசு இணைந்த ஐந்து தொலை தொடர்பு கல்வி நிலையங்களை சமீபத்தில் பெரிந்தல்மன்னாவைச் சார்ந்த செலமாலா என்ற இடத்தில் அமைத்து வருகின்றனர். 

அதற்கு கேரள புதிய உம்மன் சாண்டி காங்கிரஸ் அரசு 335 ஏக்கர் அரசு நிலத்தினை கொடுத்து ரூபாய் 75 கோடி திட்டத்தில் கல்வி நிலையங்கள் தயார் ஆகிக்கொண்டுள்ளன என்பதினை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.கே அப்துல் அஜீஸ் சமீபத்தில் கேரளாவில் தெரிவித்துள்ளார். 

அது மட்டுமா முஸ்லிம்களை முன்னேற்ற ரூபாய் 1100 கோடி ‘விசன் பிளான’ என்ற திட்டமும் இருப்பதாக சொல்லியுள்ளார். 

இதனை நான் எதற்காக இங்கே குறிப்பிடுகிறேனென்றால் நமது முஸ்லிம் சமுதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழ் நாட்டிலும் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்துடன் இணைந்து தமிழ் நாட்டிலுள்ள பெரிய முஸ்லிம் ஊர்களை தேர்ந்தெடுத்து அந்த ஊர்களிலும் அது போன்ற கல்லூரிகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம். அதற்கு உறுதுணையாக தமிழக அரசின் உதவியையும் மத்திய அரசின் உதவியையும் நாடலாம்.

சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை போன்ற நகரங்களில் சமுதாய இயக்கங்கள் அங்குள்ள முஸ்லிம் கல்வி நிலையங்களை நாடி மத்திய-மாநில அரசு உயர் பதவிகளுக்கான கோச்சிங்(பயிற்சி) வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம். 

மேற்குறிப்பிட்ட நகரங்களில்  வேலை சேவை மையங்கள் அமைத்து அயல் நாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள முஸ்லிம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வேலையாட்களை தேர்வு செய்யலாம்.
முஸ்லிம் மக்களுக்கு செய்யும் ஒவ்வொரு சேவையும் வல்ல இறைவனுக்கு நோன்பு நேரத்தில் செய்யும் சேவையாக எண்ணி முஸ்லிம் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ஈடுபட்டால் நிச்சயமாக நாம் மற்றவரகளுக்கு சலைத்தவர்கள் அல்ல என்பதினை நிலை நிறுத்தலாம். அப்படி செய்யார்களா சமூக அமைப்புகள் என்று பொறுத்திருந்து பார்க்கலாமா சகோதர, சகோதரிகளே!

- டாக்டர் எ.பீ.  முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

Sunday, 7 August 2011

40. ஜ‌க்கா‌த்


கடமைக‌ளி‌ல் மு‌க்‌கியமான ஜ‌க்கா‌த்
இஸ்லாமிய மாதங்களிலேயே ரமலான் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ரமலான் மாதத்தை, மற்ற எல்லா மாதங்களுக்கும் தலைமையான மாதம் என்று அருளியுள்ளார்.

இதற்குக் காரணம் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன என்று ஹதீஸ் கிதாபுகளில் கூறப்பட்டுள்ளன.

ஒருமாத காலம் மேற்கொள்ளப்படும் ரமலான் நோன்பானது, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க கடைப்பிடிக்கப்படுவதால், அதற்கான கூலியை நோன்பை மேற்கொள்பவருக்கு அல்லாஹ்வே நேரடியாக வழங்குகிறார் என்பதே இந்த மாதத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது.

மற்ற மாதங்களில் செய்யும் நன்மைகளை அல்லாஹ், மலக்குகளின் வாயிலாக வழங்கச் செய்கிறார்.



அல்லாஹ், நோன்பாளிகள் மீது "ஜக்காத்' என்ற ஏழை வரியைக் கடமையாக்கி உள்ளார். ஜக்காத் யார் மீது கடமை என்பதையும், அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களில் விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

நோன்பாளி, "லைலத்துல் கத்ர்' என்ற நாளிலோ அல்லது அதற்கு முன்போ, தன்னிடம் உள்ள சொத்து, தங்கம், மற்ற வருவாய்களில் இரண்டரை விழுக்காட்டைக் கணக்கிட்டு அதைப் பெறத் தகுதியான ஏழைகளுக்கு கொடுத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோன்பாளிகள் ஈத் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போலவே, ஏழை எளியவர்களும் அந்தப் பெருநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

ஜக்காத் குறித்து நபிகள் நாயகம் அருளியது: 

``எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. வாய்மையுடனும், உள்ளத் தூய்மையுடனும் ஏழைகளுக்கு உதவியை கொடுக்கிறீர்களா? என்பதுதான் முக்கியம்''.

"நெருப்பை தண்ணீர் அழித்து விடுவது போன்று, செய்கின்ற தர்மங்கள் பாவங்களை அழித்து விடுகின்றன; தர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடுகின்றது; துர்மரணத்தையும் தடுக்கின்றது''.

இன்னும் இது போன்ற பல சிறப்புகள், ஜக்காத் என்ற தர்மம் கொடுப்பதில் இருக்கின்றன. எனவே ஆண்டுக்கு ஒரு முறை "ஜக்காத்' என்ற கட்டாயக் கடமையை நாம் இப்புனித மாதத்தில் நிறைவேற்றி, ஏழைகளும் வறியோர்களும் ஈத் பெருநாளில் மகிழ்ச்சியடையும்படி செய்வோமாக

---------------------------------------------------------------



ஜகாத் தொகையை கணக்கிட ஒரு கால்குலேட்டர்

இறைவன் நமக்கு அளித்த பொருட்செல்வத்தை எவ்விதம் செலவு செய்தோம்? என்பது குறித்து நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். குறிப்பாக நாம் செலுத்த வேண்டிய ஜகாத் என்னும் ஏழை வரியை முறையாகக் கணக்கிட்டு செலுத்தினோமா? என்பது குறித்து நிச்சயமாக விசாரிக்கப்படுவோம். எனவே மறுமை வங்கிக் கணக்கின் சேமிப்பை எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்படுத்துகிறோமா அவ்வளவுக்கு மறுமையில் நாம் பயன் பெறலாம்.
நமது அனைத்து சொத்துக்களுக்கான ஜகாத் விகிதத்தைக் கணக்கிட இதோ ஒரு கால்குலேட்டர்.


அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமளான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஜகாத் ம்ற்றும் ஃபித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.


சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஜகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.


இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தளத்தில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஜகாத், ஃபித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட ஃபித்ரா மற்றும் ஜகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.
ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்

அ. சஜருதீன்ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------






2:43தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்


2:83இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்


2:110இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.


2:177புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)


2:277யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


4:77“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”


4:162எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.


5:12நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”


5:55நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்


7:156“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்


9:5(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்


9:11ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து,ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.


9:18அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.


9:60(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்


9:71முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய)ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்


19:31“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்


19:55அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.


21:73இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.


22:41அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.


22:78இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.


24:37(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.


24:56(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும்ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்


27:3(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்


30:39(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்


31:4அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.


33:33(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்;ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்


58:13நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்


73:20நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.


98:5“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”

39. திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு மெளலானா சையத் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்)


அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களே,

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்தமெளலானா சையத் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்) அவர்களின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு தற்பொழுது, முழுவதுமாகஇண்டெர் நெட்டில் வந்திருக்கிறது.

கீழே இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்திநீங்கள் உங்களுக்கு வேண்டிய ஸுராவையும்வசனங்களையும் தேர்வு செய்து மொழியாக்கத்தை படிக்கலாம்.

அரபி ஃபாண்டுடன் படிக்கஇத்துடன் இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்திபாண்ட் ஃபைலை பதிவிறக்கம் செய்துவின்டோஸ் ஃபாண்ட் டைரக்டரியில் இன்ஸ்ட்டால் செய்யவும்.


www.ift-chennai.org



38. என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்?

என்ன படிக்கலாம்?

என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்?
http://www.nellaieruvadi.com/neea/images/NEEA_Edu_Guide.pdf