Pages

Tuesday 6 March 2012

59. புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்


புனித ஹஜ் பயணம் செல்ல ஏப்ரல் 16-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்



தமிழ் நாட்டிலுள்ள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த மக்களிடமிருந்து, இந்த ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக தமிழ் நாடு மாநில ஹஜ் குழு பெற்றுக் கொள்ள விருக்கிறது.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ரோஸி டவர், மூன்றாம் தளத்தில் இயங்கி வரும் தமிழ் நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலரிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது இவ்விண்ணப்பங்களைWWW.hajcommittee.com என்ற இணைய தளம் மூலமாகவும் மற்றும் விண்ணப்பப் படிவத்தை நகல்கள் எடுத்தும், உபயோகப்படுத்தலாம்.

பாஸ்போர்ட்டில் மட்டுமே ஹஜ் பயணத்திற்கான விசா வழங்கப்படும் என சவுதி அரேபிய அரசு அறிவித்துள்ளதால், பன்னாட்டு பாஸ் போர்ட்டுகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே ஹஜ் பயணத்திற்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவர். 

மனுதாரர்களின் பாஸ்போர்ட்டுகள் 31.3.2013 வரையில் செல்லத்தக்கதாக இருக்கவேண்டும். ஹஜ் பயணம் தொடர்பான முழுமையான விவரங்களுக்கு வழிமுறைகள் மற்றும் கையேட்டைப் படித்தும் அல்லது இந்திய ஹஜ் குழுவின் இணையதளம் மூலமாக தெரிந்துக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பயணி ஒருவருக்கு ரூ.200-ஐ திருப்பித் தரப்படாத பரிசீலனைக் கட்டணமாக பாரத ஸ்டேட் வங்கியில், மத்திய ஹஜ் குழு விற்கான நடப்புக்கணக்கு எண்.32175017712-ல் செலுத்தி அதற்கான வங்கி ரசீதின் நகல் மற்றும் சுய கையொப்பமிட்ட பாஸ்போர்ட் நகலினை இணைத்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு 16-04-2012-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்

Sunday 4 March 2012

58. நோன்பு பெருநாள்



நோன்பு பெருநாளை

 வெகு விமர்சையாக கொண்டாடுவோம். 






அஸ்ஸலாமு அழைக்கும் 

நபி ஸல் அவர்களின் பிறந்த நாளை நாமெல்லாம் விழாவாக ஊர்

 முழுக்க வட்டார வாரியாக சாப்பாட்டு சமைத்து மகிழ்ச்சியாக இருந்ததை

 போல வரும் நோன்பு பெருநாளையும் வெகு விமர்சையாக

கொண்டாடுவோம். 

            நோன்பு முழுக்க தெரு மாணவர்களிடையே குரான் கிராத் போட்டி,

அதான் (பாங்கு) கூறும் போட்டி, குரான் வினா விடை போட்டி, குரான்

 வசனங்கள் ஒப்பித்தல் போட்டி ஆகிய வற்றை நடத்தி பெருநாள்

 அன்றைக்கு பரிசு வழங்கலாம்.

             தெரு வாரியாக (சிறுமிகள் ,கன்னி பெண்கள், கல்யாணம் ஆன

 பெண்கள் என்று தனி தனியே அவர்களிடையே மார்க்கத்தை எவ்வாறு

 மேலும் பற்றுதலுடன் பின் பற்ற வேண்டும் அதுக்கு ஏற்றவாறு

 போட்டிகள் அமைய வேண்டும்) பெண்களிடையே போட்டி நடத்தி பரிசு

 வழங்கலாம்.

          பெருநாள் அன்றைக்கு பெண்கள் சமையலுக்கு விடுமுறை அளித்து


 ஊர் முழுக்க சமைத்து சாப்பிட்டு சந்தோசமாக இருப்போம்.


         குரான் இறங்கிய மாதத்தில் குரானை அனைத்து மக்களுக்கும் 


 சென்றடைய இந்த வழிமுறையை பின்பற்றலாமா ?

- ஹஸன், மேலப்பாளையம்

மேலப்பாளையத்தில் பல்நோக்கு மருத்துவமனை - காலத்தின் கட்டாயம்

மேலப்பாளையத்தில் பல்நோக்கு மருத்துவமனை காலத்தின் கட்டாயம்:- 

அன்பார்ந்த மேலப்பாளையம் சகோதரர்களே
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹு )

மேலப்பாளையத்தில் மேலப்பாளையம் மக்களால் 
ஒரு பல்நோக்கு மருத்துவமனை கட்டப்பட வேண்டும்.


இது குறித்து மேலப்பாளையம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் கூடி இன்ஷா அல்லாஹ் விரைவில் மருத்துவமனை உருவாக்குவதற்க்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் 

மேலப்பாளையம் அலங்கார் திரையரங்கம் இருந்த இடத்தில் 
அனைத்து வசதிகளும் உள்ளடக்கிய பல்நோக்கு மருத்துவமனை கட்டலாம்.
ஆலோசிப்பார்களா ? நமது  ஊர் மக்கள் நலனில் அக்கறை கொண்ட, எப்பொழுதும் மக்களுக்காக சிந்திக்கின்ற நமது சமுதாய தலைவர்கள்.

நமது ஊருக்கு சனி பிடித்ததின் ஆரம்பமே டாக்டர்களால் தான் என்பது எல்லோருக்கும் தெரியும். 

உடையார்பட்டி லட்சுமி பிரசவ மருத்துவமனைக்கு  நமது பெண்கள் போனாலே 'ஆப்பு'ரேசன் தான் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ? 

மருத்துவ முகாம் என்று மக்களை ஏமாற்றாமல் நம் மக்களுக்கு நிரந்தரமாக குறைந்த விலையில் மருத்துவம்  பார்க்க வழி ஏற்படுத்துங்கள். 

இன்று நமது மக்களின் நோயை வைத்து எத்தனை டாக்டர்கள் காசை பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள் என்பது யாருக்கு தெரியும் ?

அறிவாலும், நோயற்ற வாழ்வாலும் சமுதாயத்தை பேணி பாதுகாப்போம்.


வெற்று கோசங்களால் அல்ல.

“இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” - Al Quran 46:15


ஒரு மய்யித்தைப் பின்தொடர்ந்து மூன்று விஷயங்கள் செல்லும்: 
1. அவனுடைய குடும்பம் 2. சொத்து 3. அமல் 
அவற்றில் இரண்டு திரும்பி விடும். ஒன்று மாத்திரம் அதனுடன் இருக்கும். குடும்பமும் சொத்தும் திரும்பி விடும். அமல் மாத்திரம் கூட இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    ஒரு மனிதன் இறந்து விட்டால் மூன்றைத் தவிர அவனது செயல்பாடுகள் முடிவுக்கு வந்து விடுகின்றன. அவைகளாவன: 1.நிலையான தர்மம், 2. பயனளிக்கும் கல்வி, 3. தனக்காக பிரார்த்தனை செய்யும் நல்லொழுக்கமுள்ள குழந்தை ஆகியனவாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)