Pages

Monday 1 August 2011

29. குடும்பத்தின் முதல் பட்டதாரியா? சலுகை அளிக்கிறது தமிழக அரசு


குடும்பத்தின் முதல் பட்டதாரியாகப் போகும் கல்லூரி

மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிக் கட்டணத்தில்

சலுகை அளிக்கிறது தமிழக அரசு

 

மக்களே!!!

முக்கியமான ஒரு விசயம். விவரம் தெரியாதவங்களுக்குப் பகிருங்க. கொஞ்சம் லேட்தான் ஆனாலும் அடுத்த வருசமாவது உதவும்.

குடும்பத்தின் முதல் பட்டதாரியாகப் போகும் கல்லூரி மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிக் கட்டணத்தில் சலுகை அளிக்கிறது தமிழக அரசு. இதற்காக செய்ய வேண்டியது இரண்டு படிவங்களைப் பூர்த்தி செய்து, ஒன்றில் டெபுடி தாசில்தாரின் கையொப்பம். இன்னொன்றில் மாணவரும் அவரது பெற்றோரும் ஜாயிண்ட் டிக்ளரேஷன்.

படிவங்களை இணைத்துள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்தப் படிவங்களை கவுன்சலிங்குக்குச் செல்லும்போதே ஒப்படைக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கைக் கையேடு சொல்கிறது.

அறியாதவர்களுக்குச் சொல்லுங்கள்



-----------------------------------------------------------------------------------------------

3:13. (பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு

ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின்

பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது;

நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத்

தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்;

இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக்

கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக,

(அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக

ஒரு படிப்பினை இருக்கிறது.

No comments:

Post a Comment