Pages

Monday 15 August 2011

மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை MIT


மேலப்பாளையம் வளர்ச்சி அறக்கட்டளை


Melapalayam Improvement Trust

Website : www.melapalayamit.in


-----------------------------------

You name change and spelling mistake change possible

Name change in Tamilnadu Gazzette

Service Contact:
Mr. V.K.M. Mohamed Uthuman, Melapalayam
+91 7845915533


------------------------------------------------------

Monday 8 August 2011

41. அறிவுப் பெட்டகம் குர்ஆனைக் பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?

அறிவுப் பெட்டகம் குர்ஆனைக் பெற்ற நாம் பின்தங்கி இருப்பதேன்?



‘நிலம் வெளுக்க நீர் உண்டு மக்கள் மனம் வெளுக்க குர் ஆன் வேதமுண்டு’  என்று நானிலம் போற்றும் வள்ளல் நபி அவர்களுக்கு அறிவூற்றினை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சந்தததியர் கல்வி கேள்வியில் பின்தங்கியிருக்கலாமா?

 ‘சீனம் சென்றும் சேர்க்க நல்லறிவை’ என்று பகன்ற கோமான் நபி பொன்மொழியினை புறக்கணித்து கண்ணிருந்தும் மூடர்களாக ஆகலாமா?

 ‘கல்வி நோக்கி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சொர்க்கத்தினை நோக்கி வீறு நடைபோடும் அடிச்சுவடு” என்ற வாக்கினை புறக்கணிக்கலாமா?

 500 ஆண்டுகள் ‘ஆண்ட சமுதாயம’; என்று பீற்றத் தெரிந்த நாம் மற்றவர்களுக்கு முன் மாதிரி ஆக திகழ வேண்டாமா?

போன்ற கேள்விகள் நான் மட்டும் கேட்க வில்லை. மாறாக இந்தியாவில் ஹைதராபாத் நகரிலுள்ள உருது பல்கலைக் கழகத்தின் சமூக புறக்கணிப்புகள் பற்றி பாடம் நடத்தும் இயக்குனர் மேன்மைமிகு கன்சன் இலையா என்பவரும் கேட்கிறார என்றால் அது நியாயம் தானே!.

கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ், ‘எந்த சமுதாயம் ஏன், எதற்கு, எப்படி, எதனால், யார், எப்போது’ என்ற கேள்விகள் கேட்கவில்லையோ அந்த சமுதாயம் பின் தங்கி தான் இருக்குமென்றார். 

ஒரு காலத்தில் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு ஆணி வேராக இருந்த முகம்மது அலி ஜின்னா, முகம்மது அலி, சவுக்கத் அலி, அலிஹார் பல்கலைக் கழகத்தினை நிறுவிய சர் செய்யத் அஹமது கான் போன்றோர் அறிவுசார் முஸ்லிம்களாக கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் கேள்விப்படாத சில முஸ்லிம் அறிஞர்களும் இருந்திருக்கின்றனர். 

உதாரணத்திற்கு பிரிட்டிஷ் கலெக்கெட்டராக இருந்த ஆஷ் துரையினை சுட்டுக் கொன்ற வழக்கில் தீர்ப்புச் சொன்ன ஐந்து நீதிபதிகளில் ஒரு நீதிபதி அப்துல் ரஹீம் ஆகுமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதா?
புpரிட்டிஷ் ஆஷ் துரைதான் வா.உ.சி அவர்கள் சுயாட்சி கப்பலினை தூத்துக்குடி கடலில் செலுத்திய போது தடுத்து நிறுத்தி அட்டூழியம் செய்தவர். அவர் தன் மனைவியுடன் சென்ற போது மணியாச்சி ரயில் நிலையத்தில் தியாகி வாஞ்சி நாத அய்யரால் கொலை செய்யப் பட்பவர். அந்த வழக்கில் சுப்ரமணி பாரதி ஆகியோர் குற்றஞ் சாட்பப்பட்டனர். 

அந்த வழக்கினை விசாரித்த ஐந்து நீதிபதிகளில் மூவர் ஆங்கிலேயர். ஒருவர் பி.ஆர். சுந்தர ஐயர் மற்றமொருவர் தான் நீதிபதி அப்துல் ரஹீம் அவர்கள். அந்த வழக்கில் ஆங்கிலேய நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுத்தாலும், இன்னொரு நீதிபதியான பி.ஆர். சுந்தர ஐயர் குற்றவாளிகளின் குற்றத்தில் சந்தேகம் எழுப்பினாலும், அவர்களை நிரபராதி என்று தைரியமாக சொல்லவில்லை. 

ஆனால் நீதிபதி அப்துல் ரஹீம் மட்டும் தைரியமாக அந்த குற்றவாளிகள் நிரபராதிகள் என்றும், நாட்டுக்காக போராடும் வீரர்கள் என்றும் மறுப்பு தீர்ப்பினை தைரியமாக வழங்கினார். இதனை எதற்காக சொல்கிறேன் என்றால் அப்படி கல்வி, கேள்வியல் சிறந்து விளங்கி ‘எப்படியிருந்த நாம் இன்று பின் தங்கி இருப்பதிற்கு’ காரணம் என்ன என்ற அறிய வேண்டும் என்பதிற்குத் தான் மேற்கொண்ட எடுத்துக் காட்டுதல் ஆகும்.


இஸ்லாமிய மார்க்கத்திற்கு ஆரம்ப காலத்தில் மாறிய முஸ்லிம்கள் இந்திய ஜாதீய சமுதாயத்தில் அடித்தளத்திலிருந்த மக்களும், தலித்துகள் தான் என்று சொல்லப்படுகிறது. இந்து தலித்துகளுக்கு அரசியல் சாசனத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் உறுதி செய்யப்படுகிறது. ஆனால் ஏழை முஸ்லிம்களுக்கு அவ்வாறு எந்த உறுதியும் செய்யப்படவில்லை.. அதனால் அவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதில்லை என்பது ஒருபுறம் இருக்கும் போது, அப்படி முஸ்லிம்கள் படித்திருந்தாலும் வேலை உத்திரவாதமில்லை. தலித்துகள், பழங்குடியினர், மற்ற பிற்பட்ட ஜாதி இந்துக்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆங்கிலக் கல்வி அளிக்க முன்னுரிமை கொடுக்கின்றனர். 

ஆனால் கிராமப்புற ஏழை முஸ்லிம்கள் தங்கள் குழந்தைகளை குர்ஆன் ஓத மட்டும் முன்னுரிமை கொடுக்கின்றனர். 3.8.2011 சகர் நேர தொலைக் காட்சியில் பேசிய வளைகுடா வாழ் என்ஙினீயர் ஒருவர் சொல்லும் போது, ‘அவரிடம் வேலை பார்க்கும் ஒரு பிளம்பர் அவரிடம் தன் மகன் தமிழ்நாட்டில் எட்டாவது படிப்பதாகவும் ஏதாவது பிளம்பர் வேலை போட்டுக் கொடுத்தால் போதும் அவனை வளைகுடாவிற்கு அழைத்துக் கொள்வேன்’ என்ற கொன்னாராம். அவருக்கு புத்திமதி சொல்லி அவர் மகனை மேல் படிப்பு தொடர்ந்து படிக்க வையுங்கள் என்றாகவும் தொலைகாட்சிக்கு பேட்டி கொடுத்தார். இது எதனைக் காட்டுகிறது என்றால் பிள்ளைகள் படித்தாலும் வேலை கிடைக்குமா என்ற உண்மையான பயம் முஸ்லிம்கள் மனதில் இருப்பதினைக் காட்டவில்லையா?

அமெரிக்கா இரட்டைக் கோபுர இடிப்பிற்குப் பின்னரும், மும்பை தீவிரவாத தாக்குதல் பின்னரும் முஸ்லிம் குழந்தைகளை இங்கிலிஸ் பள்ளியில் சேர்ப்பதிலும், முஸ்லிம்களுக்கு வீடு கொடுப்பதிலும் பாரபட்சம் காட்டப்படுகிறது என்று பல்வேறு மக்களும், பிரபல நடிகர் சாருக்கான், நடிகை ஷாபனா ஆஸ்மி கூட சொல்லியுள்ளார்கள் என்றால் பாருங்களேன் சாதாரண முஸ்லிம்கள் என்ன பாடுபடுவார்கள் என்று.

ஹிந்து ஜெயின் வியாபாரிகள் தங்கள் குழந்தைகளை எப்படியும் மேல் படிப்பிற்கு அனுப்பி அதன் மூலம் தங்கள் வியாபாரத்திற்கு உதவியாக அவர்களை எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் முஸ்லிம் வியாபாரிகள் கூட தங்கள் குழந்தைகளை மேல் படிப்பிற்கு அனுப்புவதில்லையே அது ஏன்?

2001 கணக்கெடுப்பின் படி கல்வியறிவு பெற்ற முஸ்லிம்கள் 60 விழுக்காடுகள் ஆகும். ஆனால் கல்வி கற்ற ஹிந்துக்கள் 75.5 சதவீதமாகும், கிருத்துவர்கள் எண்ணிக்கையோ 90.3 சதவீதமாகும். நம்மைப்போன்ற மைனாரிட்டி சமூகம் என்ற கூறிக் கொள்ளும் சீக்கியர்கள் கல்வியறிவில் 70.4 விழுக்காடும், புத்தர்கள் 73 விழுக்காடும், ஜெயின்கள் 95 சதவீதமாகமென்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?

கிருத்துவர்களும், ஜெயின் மக்களும் தங்கள் மக்களுக்கு தரமான உயர்கல்வியினை தன்னலமற்ற கல்வி நிலையங்களை அமைத்து அவர்கள் மதத்தினைச் சார்ந்தவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம் தன்வந்தர்கள் வசதி வாய்ப்பிலிருந்தும் கல்வி நிலையங்களை அமைத்து நாலு காசு பண்ணும் கல்வி நிலையங்களாக மைனாரிட்டி கல்வி நிலையங்கள் என்ற தோரணையில் அமைத்து ஏழை முஸ்லிம்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல முடியும். 

 சில் முஸ்லிம் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை லகர டொனேசன் பெற்றல்லவா நியமிக்கிறார்கள். எங்கே சொல்வது இந்த வேதனையை!
பின் எங்கே முஸ்லிம்கள் கல்வியில் முன்னேறி சமுதாயத்திலும் முன்னேற  முடியும்?

நீதிபதி சச்சார் கமிட்டி அறிக்கை ‘ஒரு புனித அறிக்கை இல்லை’ என்று சமீபத்தில் சென்னை வந்த முஸ்லிம் மத்திய அமைச்சர் சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. 

ஆனால் அந்த அறிக்கை புனித அறிக்கையோ இல்லையோ தெரியாது ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அந்த அறிக்கையால் இந்தியாவில் முஸ்லிம்கள் எந்தளவிற்கு கல்வி, வேலை, சமூக அமைப்பில்; பின்தங்கி ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்பது உலகிற்கு எடுத்துக்காட்டிய வால் நட்சத்திரமாக தெரியவில்லையா?


அந்த அறிக்கையில்  முஸ்லிம்கள் அதிகமாக வாழும் 12 மாநிலங்களில் 15 சதவீதம் பேர்கள் முஸ்லிம்கள். ஆனால் அரசு வேலையில் அவர்கள் பெற்ற வாய்ப்போ 5.7 விழுக்காடுதான்.  

போலீஸ், நிர்வாகம், வெளிநாடுகளிலுள்ள தூதரக அலுவலகங்களில் அவர்களுக்குள்ள வாய்ப்பு 1..6 விழுக்காடிலிருந்து 3.4 விழுக்காடு தான் என்றும், நீதித்துறையிலும், ராணுவத்திலும் மிக, மிகக் குறைந்த அளவே பணியாற்றுகிறார்கள் என்றும் சொல்லியுள்ளது. 

அது மட்டுமா உளவுத்துறையான ஐ.பி, ரா, என்.எஸ்.ஜி போன்ற அமைப்புகளில் முஸ்லிம்கள் வேலை வாய்ப்பே இல்லை என்றே சொல்லலாம். 

இந்தத் தருணத்தில் ஒரு உதாரணத்தினை மட்டும் உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கின்றேன். 1981ஆம் ஆண்டு நான் வண்ணாரப்பேட்டை ஏ.சியாக பணியாற்றியபோது டி.ஜி.பியாக டி.டி.பி. அப்துல்லா அவர்கள் பணியாற்றினார்கள். 

நான் அவரிடம் ஒரு மனுவினைக் கொடுத்து  மாநில எஸ்.பி.சி.ஐ.டியில்(உளவுத்துறை) பணியாற்ற விருப்பம் தெரிவித்தேன். அவரும் அந்த மனுவினை பரிந்துரை செய்ய அப்போதிருந்த உளவுத்துறை தலைவரிடம் தொலைபேசியில் கருத்துக் கேட்டார். அதற்கு அந்த உளவுத்துறை தலைவர் ‘முஸ்லிம்களை எஸ்.பி.சி.ஐ,டியில் போடுவதில்லை’ என்ற மறுத்து விட்டார். 

அதன் பின்பு டி.ஜி.பி அவர்கள் என்னை சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி;யாக பணியமர்த்தினார். இது எதனைக் காட்டுகிறது என்றால் ஒரு மாநில் டி.ஜி.பியாக உள்ள ஒரு முஸ்லிம் அதிகாரியாலேயே ஒரு மாநில உளவுத்துறையில் ஒரு முஸ்லிம் டி.எஸ்.பிக்கு பதவி பெற முடியவில்லை என்றால் இந்திய அளவில் அவர்கள் பங்கு எப்படியிருக்கும் என்று உங்களுடைய யூகத்திற்கே விட்டு விடுகிறேன்.
 
சரி இஸ்லாமியர் பங்களிப்பு அரசு உயர் பதவியான ஐ.ஏ.எஸ், ஐ.பீ.எஸ், ஐ.எப்.எஸ் மற்றும் மத்திய பதவிகளின் நிலை என்ன என்பதினை ஆல் இண்டியா மில்லி கவுன்சில் அப்போதிருந்த பிரதமரிடம் 1998 ஆம் ஆண்டு அளித்தது. அதில் 3883 ஐ.ஏ.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 116 தான், 1433 ஐ.பீ.எஸ் அதிகாரிகளில் முஸ்லிம்கள் 45 தான், 2159 ஐ.எப்.எஸ் பதவிகளில் முஸ்லிம்கள் 57 பேர்கள் தான். 

ஆகவே முஸ்லிம்கள் உயர் பதவிகளில் வெறும் 3 விழுக்காடுகளுக்குள் தான் இருந்திருக்கிறார் இப்போதும் இருக்கிறார்கள். 
 
முஸ்லிம்கள் நலனுக்காக கோபால் சிங் கமிட்டி, மிஸ்ரா கமிட்டி மற்றும் சச்சார் கமிட்டி போன்றவைகள் அமைத்தும் இன்னும் அந்த கமிட்டிகளின் பரிந்துரைகள் காற்றுப்பட்டு இருகிய சிமிட்டிகளாகவே பயனற்று உள்ளன. 

ஆனால் முஸ்லிம்கள் வாழ்க்கைத்தரம் மற்றும் மாற வில்லை. அந்த மாற்றம் தர வேண்டுமென்றால் முஸ்லிம்கள் தங்கள் கல்வித்தரத்தினை உயர்த்த வேண்டும். உயர் கல்விக்காக அரசு பல சலுகைகளை அறிவித்துள்ளது. அதனை பெற்று நாமும் நம் சமுதாய மக்களுக்கு உயர் கல்வியினை வழங்க வேண்டும்.

 27 விழுக்காடு ஒ.பி.சி ஒதுக்கிட்டில் முஸ்லிம்களுக்கென்று தனி ஒதுக்கீடு பெற முயற்சி செய்ய வேண்டும். தற்போது உச்ச நீதி மன்றத்தில் ஒபிசி 27 சதவீத ஒதுக்கீடு பற்றிய வழக்கில் இணைத்துக் கொண்டு புள்ளி விபரங்களை அளித்து முஸ்லிம்களுக்கு தனி ஒதுக்கீடு பெற முயல வேண்டும்.

அலிகார் முஸ்லிம் பல்பலைக்கழகத்தினை முஸ்லிம்கள் உயர் கல்வி கற்க வேண்டுமென்ற 144 வருடத்திற்கு முன்பு சர் செய்யத் அஹமது கான் 1867ஆம் ஆண்டு நிறுவினார். அந்த பல்கலைக் கழகம் அலிகாரை விட்டு எந்த இடத்திலும் கல்வி நிலையங்கள் அமைக்கவில்லை. 

ஆனால் கேரள மலப்புரம் முஸ்லிம்கள் முயற்சியல் சச்சார் கமிட்டியில் உள்ள பின்தங்கிய முஸ்லிம் மாவட்டங்களை கல்வியில் முன்னேற்றும் திட்டத்தில் மாநில-மத்திய அரசு இணைந்த ஐந்து தொலை தொடர்பு கல்வி நிலையங்களை சமீபத்தில் பெரிந்தல்மன்னாவைச் சார்ந்த செலமாலா என்ற இடத்தில் அமைத்து வருகின்றனர். 

அதற்கு கேரள புதிய உம்மன் சாண்டி காங்கிரஸ் அரசு 335 ஏக்கர் அரசு நிலத்தினை கொடுத்து ரூபாய் 75 கோடி திட்டத்தில் கல்வி நிலையங்கள் தயார் ஆகிக்கொண்டுள்ளன என்பதினை அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.கே அப்துல் அஜீஸ் சமீபத்தில் கேரளாவில் தெரிவித்துள்ளார். 

அது மட்டுமா முஸ்லிம்களை முன்னேற்ற ரூபாய் 1100 கோடி ‘விசன் பிளான’ என்ற திட்டமும் இருப்பதாக சொல்லியுள்ளார். 

இதனை நான் எதற்காக இங்கே குறிப்பிடுகிறேனென்றால் நமது முஸ்லிம் சமுதாய இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து தமிழ் நாட்டிலும் அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்துடன் இணைந்து தமிழ் நாட்டிலுள்ள பெரிய முஸ்லிம் ஊர்களை தேர்ந்தெடுத்து அந்த ஊர்களிலும் அது போன்ற கல்லூரிகளை அமைக்க முயற்சி மேற்கொள்ளலாம். அதற்கு உறுதுணையாக தமிழக அரசின் உதவியையும் மத்திய அரசின் உதவியையும் நாடலாம்.

சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தஞ்சாவூர், கோவை போன்ற நகரங்களில் சமுதாய இயக்கங்கள் அங்குள்ள முஸ்லிம் கல்வி நிலையங்களை நாடி மத்திய-மாநில அரசு உயர் பதவிகளுக்கான கோச்சிங்(பயிற்சி) வகுப்புகள் ஏற்பாடு செய்யலாம். 

மேற்குறிப்பிட்ட நகரங்களில்  வேலை சேவை மையங்கள் அமைத்து அயல் நாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள முஸ்லிம் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வேலையாட்களை தேர்வு செய்யலாம்.
முஸ்லிம் மக்களுக்கு செய்யும் ஒவ்வொரு சேவையும் வல்ல இறைவனுக்கு நோன்பு நேரத்தில் செய்யும் சேவையாக எண்ணி முஸ்லிம் அரசியல் மற்றும் சமூக அமைப்புகள் ஈடுபட்டால் நிச்சயமாக நாம் மற்றவரகளுக்கு சலைத்தவர்கள் அல்ல என்பதினை நிலை நிறுத்தலாம். அப்படி செய்யார்களா சமூக அமைப்புகள் என்று பொறுத்திருந்து பார்க்கலாமா சகோதர, சகோதரிகளே!

- டாக்டர் எ.பீ.  முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

Sunday 7 August 2011

40. ஜ‌க்கா‌த்


கடமைக‌ளி‌ல் மு‌க்‌கியமான ஜ‌க்கா‌த்
இஸ்லாமிய மாதங்களிலேயே ரமலான் மாதம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ரமலான் மாதத்தை, மற்ற எல்லா மாதங்களுக்கும் தலைமையான மாதம் என்று அருளியுள்ளார்.

இதற்குக் காரணம் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் அதிகமான நன்மைகள் கிடைக்கின்றன என்று ஹதீஸ் கிதாபுகளில் கூறப்பட்டுள்ளன.

ஒருமாத காலம் மேற்கொள்ளப்படும் ரமலான் நோன்பானது, அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க கடைப்பிடிக்கப்படுவதால், அதற்கான கூலியை நோன்பை மேற்கொள்பவருக்கு அல்லாஹ்வே நேரடியாக வழங்குகிறார் என்பதே இந்த மாதத்தின் சிறப்புக்கு மேலும் ஒரு காரணமாக அமைகிறது.

மற்ற மாதங்களில் செய்யும் நன்மைகளை அல்லாஹ், மலக்குகளின் வாயிலாக வழங்கச் செய்கிறார்.



அல்லாஹ், நோன்பாளிகள் மீது "ஜக்காத்' என்ற ஏழை வரியைக் கடமையாக்கி உள்ளார். ஜக்காத் யார் மீது கடமை என்பதையும், அதை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதையும் குர் ஆன் மற்றும் ஹதீஸ்களில் விரிவாக விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

நோன்பாளி, "லைலத்துல் கத்ர்' என்ற நாளிலோ அல்லது அதற்கு முன்போ, தன்னிடம் உள்ள சொத்து, தங்கம், மற்ற வருவாய்களில் இரண்டரை விழுக்காட்டைக் கணக்கிட்டு அதைப் பெறத் தகுதியான ஏழைகளுக்கு கொடுத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நோன்பாளிகள் ஈத் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைப் போலவே, ஏழை எளியவர்களும் அந்தப் பெருநாளில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் ஜக்காத் கடமையாக்கப்பட்டுள்ளது.

ஜக்காத் குறித்து நபிகள் நாயகம் அருளியது: 

``எவ்வளவு கொடுத்தீர்கள் என்பது ஒரு பொருட்டல்ல. வாய்மையுடனும், உள்ளத் தூய்மையுடனும் ஏழைகளுக்கு உதவியை கொடுக்கிறீர்களா? என்பதுதான் முக்கியம்''.

"நெருப்பை தண்ணீர் அழித்து விடுவது போன்று, செய்கின்ற தர்மங்கள் பாவங்களை அழித்து விடுகின்றன; தர்மம் இறைவனது கோபத்தை அணைத்து விடுகின்றது; துர்மரணத்தையும் தடுக்கின்றது''.

இன்னும் இது போன்ற பல சிறப்புகள், ஜக்காத் என்ற தர்மம் கொடுப்பதில் இருக்கின்றன. எனவே ஆண்டுக்கு ஒரு முறை "ஜக்காத்' என்ற கட்டாயக் கடமையை நாம் இப்புனித மாதத்தில் நிறைவேற்றி, ஏழைகளும் வறியோர்களும் ஈத் பெருநாளில் மகிழ்ச்சியடையும்படி செய்வோமாக

---------------------------------------------------------------



ஜகாத் தொகையை கணக்கிட ஒரு கால்குலேட்டர்

இறைவன் நமக்கு அளித்த பொருட்செல்வத்தை எவ்விதம் செலவு செய்தோம்? என்பது குறித்து நாம் மறுமையில் விசாரிக்கப்படுவோம். குறிப்பாக நாம் செலுத்த வேண்டிய ஜகாத் என்னும் ஏழை வரியை முறையாகக் கணக்கிட்டு செலுத்தினோமா? என்பது குறித்து நிச்சயமாக விசாரிக்கப்படுவோம். எனவே மறுமை வங்கிக் கணக்கின் சேமிப்பை எவ்வளவுக் கெவ்வளவு அதிகப்படுத்துகிறோமா அவ்வளவுக்கு மறுமையில் நாம் பயன் பெறலாம்.
நமது அனைத்து சொத்துக்களுக்கான ஜகாத் விகிதத்தைக் கணக்கிட இதோ ஒரு கால்குலேட்டர்.


அன்பு சகோதரர்களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமளான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமலான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஜகாத் ம்ற்றும் ஃபித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.


சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஜகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக்காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.


இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தளத்தில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஜகாத், ஃபித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட ஃபித்ரா மற்றும் ஜகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.
ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்

அ. சஜருதீன்ரியாத் - சௌதி அரேபியா
+966 557316929


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------






2:43தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள்


2:83இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்


2:110இன்னும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்தும்; ஜகாத் கொடுத்தும் வாருங்கள்; ஏனெனில் உங்களுக்காக எந்த நன்மையை முன்னமேயே அனுப்பி வைக்கின்றீர்களோ, அதை அல்லாஹ்விடம் பெற்றுக்கொள்வீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் உற்று நோக்கியவனாகவே இருக்கிறான்.


2:177புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல்(இவையே புண்ணியமாகும்); இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள்(பயபக்தியுடையவர்கள்)


2:277யார் ஈமான் கொண்டு, நற் கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது; அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.


4:77“உங்களுடைய கைகளை(ப் போர் செய்வதினின்றும்) தடுத்துக் கொண்டும், தொழுகையை நிலைநிறுத்தியும், ஜகாத்தை கொடுத்தும் வருவீர்களாக!” என்று எவர்களுக்குக் கூறப்பட்டதோ அவர்களை (நபியே!) நீங்கள் பார்க்கவில்லையா? பின்னர், போர் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டபோது, அவர்களில் ஒரு பிரிவினர் அல்லாஹ்வுக்குப் பயப்படுபவதைப் போல் அல்லது அதைவிட அதிகமாகவே மனிதர்களுக்குப் பயப்பட்டு; “எங்கள் இறைவனே! எங்கள் மீது ஏன் (இப்) போரை விதியாக்கினாய்? சிறிது காலம் எங்களுக்காக இதைப் பிற்படுத்தியிருக்கக் கூடாதா? என்று கூறலானார்கள். (நபியே!) நீர் கூறுவீராக: “இவ்வுலக இன்பம் அற்பமானது, மறுவுலக(இன்ப)ம், பயபக்தியுடையோருக்கு மிகவும் மேலானது; நீங்கள் எள்ளளவேனும் அநியாயம் செய்யப்படமாட்டீர்கள்.”


4:162எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (வேதங்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள்; இன்னும், தொழுகையை நிலைநிறுத்துவோராகவும், ஜகாத் முறையாகக் கொடுப்போராகவும்; அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள் - அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம்.


5:12நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதி மொழி வாங்கினான்; மேலும் அவர்களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பியுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான்: “நிச்சயமாக நான் உங்களுடனேயே இருக்கின்றேன்; நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜகாத்தும் கொடுத்து, என் தூதர்களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களானால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன்னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதிகளில் உங்களை நுழைய வைப்பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட்டார்.”


5:55நிச்சயமாக உங்களுக்கு உற்ற நண்பர்கள்: அல்லாஹ்வும், அவனுடைய தூதரும்; எவர் ஈமான் கொண்டு, தொழுகையை கடைபிடித்து, ஜகாத்தும் கொடுத்து, (அல்லாஹ்வின் கட்டளைக்கு எந்நேரமும்) தலைசாய்த்தும் வருகிறார்களோ அவர்கள்தாம்


7:156“இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்” (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், ”என்னுடைய வேதனையை கொண்டு நான் நாடியவரை பிடிப்பேன்; ஆனால் என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது; எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்” என்று கூறினான்


9:5(போர் விலக்கப்பட்ட துல்கஃதா, துல்ஹஜ்ஜு, முஹர்ரம், ரஜபு ஆகிய நான்கு) சங்ககைமிக்க மாதங்கள் கழிந்து விட்டால் முஷ்ரிக்குகளைக் கண்ட இடங்களில் வெட்டுங்கள், அவர்களைப் பிடியுங்கள்; அவர்களை முற்றுகையிடுங்கள், ஒவ்வொரு பதுங்குமிடத்திலும் அவர்களைக் குறிவைத்து உட்கார்ந்திருங்கள் - ஆனால் அவர்கள் (மனத்திருந்தி தம் பாவங்களிலிருந்து) தவ்பா செய்து மீண்டு, தொழுகையையும் கடைப்பிடித்து (ஏழைவரியாகிய) ஜகாத்தும் (முறைப்படிக்) கொடுத்து வருவார்களானால் (அவர்களை) அவர்கள் வழியில் விட்டுவிடுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்


9:11ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக் கடைப்படித்து,ஜகாத்தையும் (முறையாக) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்குகிறோம்.


9:18அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜகாத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கள்தாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.


9:60(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன்


9:71முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய தூண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய)ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்


19:31“இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கின்றான்; மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜகாத்தையும் (நிறை வேற்ற) எனக்கு வஸீய்யத் செய்து (கட்டளையிட்டு) இருக்கின்றான்


19:55அவர் தம் குடும்பத்தினரைத் தொழுகையைக் கடைப்பிடிக்கவும், ஜகாத்து கொடுத்து வரும்படியும் ஏவுபவராக இருந்தார்; தம் இறைவனிடத்தில் மிகவும் விரும்பப்பட்டவராகவும் அவர் இருந்தார்.


21:73இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களை புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.


22:41அன்றியும், இவர்கள் (எத்தகையோரென்றால்) இவர்களுக்கு நாம் பூமியில் இடம்பாடாக்கிக் கொடுத்தால், இவர்கள் தொழுகையை முறையாகக் கடைப்பிடிப்பார்கள்; ஜகாத்தும் கொடுப்பார்கள்; நன்மையான காரியங்களைச் செய்யவும் ஏவுவார்கள்; தீமையை விட்டும் விலக்குவார்கள் - மேலும், சகல காரியங்களின் முடிவும் அல்லாஹ்விடமே இருக்கிறது.


22:78இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் அவனுக்காக போராட வேண்டிய முறைப்படி போராடுங்கள்; அவன் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இந்த தீனில் (மார்க்கத்தில்) அவன் உங்களுக்கு எந்த சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை; இது தான் உங்கள் பிதாவாகிய இப்றாஹீமுடைய மார்க்கமாகும்; அவன்தாம் இதற்கு முன்னர் உங்களுக்கு முஸ்லிம்கள் எனப் பெயரிட்டான். இ(வ்வேதத்)திலும் (அவ்வாறே கூறப் பெற்றுள்ளது); இதற்கு நம்முடைய இத்தூதர் உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறார்; இன்னும் நீங்கள் மற்ற மனிதர்களின் மீது சாட்சியாக இருக்கிறீர்கள் எனவே நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள் இன்னும் ஜகாத்தைக் கொடுத்து வாருங்கள், அல்லாஹ்வைப் பற்றிக் கொள்ளுங்கள், அவன்தான் உங்கள் பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன்; இன்னும் அவனே மிகச் சிறந்த பாதுகாவலன், இன்னும் மிகச் சிறந்த உதவியாளன்.


24:37(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.


24:56(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும்ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள்


27:3(அவர்கள் எத்தகையோரென்றால்) அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துவார்கள்; இன்னும், ஜகாத்தைக் கொடுப்பார்கள்; அன்றியும், அவர்கள் மறுமை வாழ்வின் மீது திட நம்பிக்கை கொள்வார்கள்


30:39(மற்ற) மனிதர்களுடைய முதல்களுடன் சேர்ந்து (உங்கள் செல்வம்) பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை; ஆனால் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை நாடி ஜகாத்தாக எதை நீங்கள் கொடுக்கிறீர்களோ, (அது அல்லாஹ்விடத்தில் பெருகும். அவ்வாறு கொடுப்போர் தாம் (தம் நற்கூலியை) இரட்டிப்பாக்கிக் கொண்டவர்களாவார்கள்


31:4அவர்கள் (எத்தகையோரென்றால்) தொழுகையை நிலை நாட்டுவார்கள்; ஜகாத்தும் கொடுத்து வருவார்கள்; இன்னும் அவர்கள் ஆகிரத்தை (மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.


33:33(நபியின் மனைவிகளே!) நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள்; முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள்) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்கள் திரியாதீர்கள்; தொழுகையை முறைப்படி உறுதியுடன் கடைப்பிடித்து தொழுங்கள்;ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; (நபியின்) வீட்டையுடையவர்களே! உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிவிடவே அல்லாஹ் நாடுகிறான்


58:13நீங்கள் உங்கள் இரகசியப் பேச்சுக்கு முன்னால் தான தர்மங்கள் முற்படுத்திவைக்க வேண்டுமே என்று அஞ்சுகிறீர்களா? அப்படி நீங்கள் செய்ய (இயல)வில்லையெனின் (அதற்காக தவ்பா செய்யும்) உங்களை அல்லாஹ் மன்னிக்கிறான்; ஆகவே, தொழுகையை முறைப்படி நிலைநிறுத்துங்கள்; இன்னும், ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; மேலும் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்; அன்றியும் நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் நன்கு அறிகிறான்


73:20நிச்சயமாக நீரும், உம்முடன் இருப்போரில் ஒரு கூட்டத்தாரும் இரவில் மூன்றில் இரு பாகங்களுக்குச் சமீபமாகவோ, இன்னும் அதில் பாதியோ இன்னும் இதில் மூன்றில் ஒரு பாகத்திலோ (வணக்கத்திற்காக) நிற்கிறீர்கள் என்பதை உம்முடைய இறைவன் நிச்சயமாக அறிவான்; அல்லாஹ்வே இரவையும் பகலையும் அளவாகக் கணக்கிடுகின்றான்; அதை நீங்கள் சரியாகக் கணக்கிட்டுக் கொள்ள மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிகிறான்; ஆகவே, அவன் உங்களுக்கு மன்னிப்பு அளித்து விட்டான். எனவே, நீங்கள் குர்ஆனில் உங்களுக்குச் சுலபமான அளவு ஓதுங்கள். (ஏனெனில்) நோயாளிகளும்; அல்லாஹ்வின் அருளைத் தேடியவாறு பூமியில் செல்லும் வேறு சிலரும், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யும் மற்றும் சிலரும், உங்களில் இருப்பார்கள் என்பதை அவன் அறிகிறான்; ஆகவே, அதிலிருந்து உங்களுக்குச் சுலபமான அளவே ஓதுங்கள்; தொழுகையை முறையாக நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தும் கொடுத்து வாருங்கள்; அன்றியும் (தேவைப்படுவோருக்கு) அல்லாஹ்வுக்காக அழகான கடனாக கடன் கொடுங்கள்; நன்மைகளில் எவற்றை நீங்கள் உங்கள் ஆத்மாக்களுக்காச் செய்து (மறுமைக்காக) முற்படுத்துகிறீர்களோ, அவற்றை நீங்கள் அல்லாஹ்விடம் மிகவும் மேலானதாகவும், நற்கூலியில் மகத்தானதாகவும் காண்பீர்கள்; அன்றியும் அல்லாஹ்விடமே மன்னிப்புக் கோருங்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.


98:5“அல்லாஹ்வுக்கு வணக்கத்தை தூய்மையாக்கியவர்களாக (தவறான வழியிலிருந்து விலகி சரியான வழியில்) பிடிப்புள்ளவர்களாக அல்லாஹ்வை அவர்கள் வணங்க வேண்டும்; மேலும் தொழுகையை அவர்கள் நிலைநாட்டவேண்டும்; மேலும் ஜகாத்தை அவர்கள் வழங்க வேண்டும் என்பதைத் தவிர (வேறெதுவும்) அவர்களுக்குக் கட்டளையிடப்படவில்லை. இதுதான் நேரான மார்க்கமாகும்.”

39. திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு மெளலானா சையத் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்)


அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர்களே,

நீண்ட நாள் எதிர்பார்த்திருந்தமெளலானா சையத் அபுல் அஃலா மெளதூதி(ரஹ்) அவர்களின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பு தற்பொழுது, முழுவதுமாகஇண்டெர் நெட்டில் வந்திருக்கிறது.

கீழே இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்திநீங்கள் உங்களுக்கு வேண்டிய ஸுராவையும்வசனங்களையும் தேர்வு செய்து மொழியாக்கத்தை படிக்கலாம்.

அரபி ஃபாண்டுடன் படிக்கஇத்துடன் இணைக்கப்பட்ட லிங்கைப் பயன்படுத்திபாண்ட் ஃபைலை பதிவிறக்கம் செய்துவின்டோஸ் ஃபாண்ட் டைரக்டரியில் இன்ஸ்ட்டால் செய்யவும்.


www.ift-chennai.org



38. என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்?

என்ன படிக்கலாம்?

என்ன படிக்கலாம்? எங்கே படிக்கலாம்?
http://www.nellaieruvadi.com/neea/images/NEEA_Edu_Guide.pdf


37. 10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?

10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு என்ன படிக்கலாம்?


10 -ஆம் வகுப்பு முடித்த பிறகு மூன்று வழிகளில் மேற்படிப்பு படிக்கலாம்.

1.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு
2. பட்டய படிப்பு (டிப்ளோமா)
3. சான்றிதழ் படிப்பு (ITI)

பத்தாம் வகுப்பு முடித்த பிறகு பெரும்பாலான மாணவர்கள் தேர்ந்தெடுப்பது மேல் நிலை (+1,+2) படிப்புதான். அதை பற்றி முதலில் பார்ப்போம். 

I.மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு : 

1. First Group எனப்படும் கணிதம், வேதியில், இயற்பில், உயிரியல் பிரிவு : பெரும்பாலும் மாணவர்கள் விருப்பும் பிரிவு. இந்த பிரிவில் படிப்பதன் மூலம், பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma), மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...), சட்டம், ஆசிரியர் படிப்புகள்,  ஆராய்சி படிப்புகள் என பெரும்பாலான  துறைகளில் மேல் படிப்பு படிக்கலாம். அரசு துறை,  தனியார்துறை என பெரும்பாலான துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது.   இந்த பிரிவில் படிப்பது மிக சிறந்தது. எதிர்காலத்தில் அதிக வேலைவாய்ப்பு உள்ள பிரிவு இதுதான், எனவேதான் இந்த பிரிவிற்க்கு அதிக போட்டி இருக்கும், மாணவர்கள் பெரும்பாலும் இந்த பிரிவில் படிக்க முயற்சி செய்யவும்.   குறிபிட்ட பள்ளிகளில் இந்த குரூப் கிடைக்காவிட்டால், இந்த குரூப் கிடைக்கும் பள்ளியில் சேருங்கள். 

2. கணிதம், வேதியில், இயற்பில், கணினி அறிவியல் பிரிவு : பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (மருத்துவம் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).   மருத்துவ துறை தவிர்த்து மற்ற பெரும்பாலன துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. First Group கிடைக்காத மாணவர்கள் இந்த குரூபையாவது தேர்ந்தெடுக்கவும்.  அதிக வேலைவாய்ப்பு பெற்றுதரும் குரூப்பில் இதுவும் ஒன்று.

3. வேதியில், இயற்பில், தாவரவியல், விலங்கியல் பிரிவு : 
மருத்துவம் (MBBS, BDS, B.Phar, Nursing etc...) சார்ந்த படிப்புகள் படிக்க சிறந்த பிரிவு. (பொறியியல் சார்ந்த பெரும்பான்மையான படிப்புகள் படிக்க இயலாது).  அதிகமாக மருத்துவம் சார்ந்த துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது

4. Commerce, Accountancy, பொருளாதாரவியல் பிரிவு :
 B.Com, CA (Charted accountant ), M.Com  படிப்பதர்க்கான பிரிவு, அரசு வேலை, Accountancy துறையில்  நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளது. 

5. வரலாறு, பொருளாதாரவியல் : 
எதிர்காலதில் B.A. M.A படிக்கலாம். அரசு தேர்வுகள் மூலம் வேலைவாய்ப்பு, ஆசிரியர் பணிகள் போன்றவற்றில் வேலைவாய்ப்புகள் உள்ளன

6. Vocational  குரூப் :  தொழில் நுட்பம் சார்ந்த படிப்புகள் அடங்கிய பிரிவு, பொறியியல் (B.E/B.Tech,B.Arch, Diploma ) சார்ந்த படிப்புகள் படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளது. 

II. பட்டய படிப்பு (டிப்ளோமா):
    இது 3 ஆண்டு படிப்பு. தொழில் நுட்பதுறைகள் , மருத்துவ துறைகள், கடல்சார் துறைகள், ஆசிரியர் படிப்புகள்  என பெரும்பாலான துறைகளில் டிப்ளோமா படிப்புகள் உள்ளன. தொழில் நுட்ப டிப்ளோமாவில் Automobile, EEE, ECE, Mechanical, civil  etc... போன்ற துறைகள் சிறந்த துறைகள்.  




மேலும் பல சிறந்த பிரிவுகள் உள்ளன.  டிப்ளோமா படித்து மேற்கொண்டு பொறியியல் (B.E/B.Tech) படிக்கலாம்.  பொறியியல் (B.E/B.Tech) படிக்க ஆர்வம் உள்ளவர்கள்  டிப்ளோமா படித்து பொறியியல் படிப்பது சிறந்ததல்ல (Not Advisable ).  12 ஆம் வகுப்பு முடித்து பொறியியல் படிக்கவும். டிப்ளோமா மட்டும் படிக்க விரும்புவர்கள் 10 -ஆம் வகுப்பிற்க்கு பிறகு டிப்ளோமா படிக்கலாம். தொழில் நுட்ப துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது.  

III. சான்றிதழ் படிப்பு (ITI):

   இது ஓராண்டு படிப்பு. Fitter welder, machinist , AC mechanic  போன்ற துறைகள் சிறந்த துறைகள். இன்னும் மருத்துவம் சார்ந்த, தொழில் நுட்பம் சார்ந்த பல்வேறு படிப்புகள் ITI-ல் உள்ளது. உடனடி வேலைவாய்பிற்க்கு ஏற்ற படிப்பு, ஆனால் அதிக சம்பளம் கிடைக்காது. 


10 - ஆம் வகுப்பு முடித்த பிறகு வேலை வாய்ப்பு (
கோரிக்கை:- தயவு செய்து மாணவர்களை 10 -ஆம் வகுப்பு மேல் படிக்க வையுங்கள்)

1. சிறு தொழில் நுட்ப பயிற்சிக்கு பிறகு வேலை. (தமிழகத்தில் அரசு, மாணவர்களுக்கு இலவசமாகவும், குறைந்த கட்டணத்திலும் தொழில் பயிற்சி அளித்து வருகின்றது.) 
2. இராணுவத்தில் வேலை மற்றும் அரசு வேலை, இரயில்வேயில் வேலை etc...
3. Date Entry வேலைகள்
4. சமுதாய கல்லூரிகள் மூலம் 6 மாத பயிற்சிக்கு பிறகு உடனடி வேலைவாய்ப்பு.

மேல் நிலை பள்ளி (+1,+2) படிப்பு , ITI, டிப்ளோமா படிப்புகள் பற்றி மேலும் அறிந்து கொள்ளsithiqu.mtech@gmail.com என்ற ஈ - மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும்

S.சித்தீக்.M.Tech

Friday 5 August 2011

35. அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள்.

அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள்.
ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர 
(வேறுயாரும்) அல்லாஹ்வின் அருளைப்பற்றி நம்பிக்கை 
இழக்கமாட்டார்கள்” என்றும் கூறினார். 12:87



 “வழிகெட்டவர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய 
 அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்)

 சொன்னார், 15:56 


39:53“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக



3:36(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்: “என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கிறேன்” எனக் கூறியதையும் நினைவு கூறுங்கள்; அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் நன்கறிவான்; ஆண், பெண்ணைப் போலல்ல (மேலும் அந்தத்தாய் சொன்னாள்:) “அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்; இன்னும் அவளையும், அவள் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் தீங்குகளி)லிருந்து காப்பாற்றத் திடமாக உன்னிடம் காவல் தேடுகின்றேன்


3:37அவளுடைய இறைவன் அவள் பிரார்த்தனையை அழகிய முறையில் ஏற்றுக் கொண்டான்; அக்குழந்தையை அழகாக வளர்த்திடச் செய்தான்; அதனை வளர்க்கும் பொறுப்பை ஜகரிய்யா ஏற்றுக்கொள்ளும்படி செய்தான். ஜகரிய்யா அவள் இருந்த மிஹ்ராபுக்குள் (தொழும் அறைக்குப்) போகும் போதெல்லாம், அவளிடம் உணவு இருப்பதைக் கண்டார், “மர்யமே! இ(வ்வுணவான)து உனக்கு எங்கிருந்து வந்தது?” என்று அவர் கேட்டார்; “இது அல்லாஹ்விடமிருந்து கிடைத்தது - நிச்சயமாக அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றி உணவளிக்கின்றான்” என்று அவள்(பதில்) கூறினாள்


3:38அந்த இடத்திலேயே ஜகரிய்யா தம் இறைவனிடம் பிரார்த்தனை செய்தவராகக் கூறினார் “இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய்.”


3:39அவர் தம் அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது, மலக்குகள் அவரை சப்தமாக அழைத்து: “நிச்சயமாக அல்லாஹ் யஹ்யா (எனும் பெயருள்ள மகவு குறித்து) நன்மாராயங் கூறுகின்றான்; அவர் அல்லாஹ்விடமிருந்து ஒரு வார்த்தையை மெய்ப்பிப்பவராகவும், கண்ணியமுடையவராகவும், ஒழுக்க நெறி பேணிய (தூய)வராகவும், நல்லோர்களிலிருந்தே நபியாகவும் இருப்பார்” எனக் கூறினர்.


-------------------------------
3:122(அந்தப் போரில்) உங்களில் இரண்டு பிரிவினர் தைரியம் இழந்து (ஓடி விடலாமா) என்று எண்ணியபோது - அல்லாஹ் அவ்விரு பிரிவாருக்கும் (உதவி செய்து) காப்போனாக இருந்தான்; ஆகவே முஃமின்கள் அல்லாஹ்விடத்திலேயே முழு நம்பிக்கை வைக்கவேண்டும்.


3:123“பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


3:124(நபியே!) முஃமின்களிடம் நீர் கூறினீர்: “உங்கள் ரப்பு (வானிலிருந்து) இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு உதவி செய்வது உங்களுக்குப் போதாதா?” என்று.


3:125ஆம்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து பொறுமையுடனிருந்தால், பகைவர்கள் உங்கள் மேல் வேகமாக வந்து பாய்ந்த போதிலும், உங்கள் இறைவன் போர்க்குறிகள் கொண்ட ஐயாயிரம் வானவர்களைக் கொண்டும் உங்களுக்கு உதவி புரிவான்.


3:126உங்கள் இருதயங்கள் (அவ்வுதவியில் நின்றும்) நிம்மதியடையவும், ஒரு நல்ல செய்தியாகவுமே தவிர (வேறெதற்குமாக) அல்லாஹ் அதைச் செய்யவில்லை; அல்லாஹ் விடத்திலல்லாமல் வேறு உதவியில்லை; அவன் மிக்க வல்லமையுடையவன்; மிகுந்த ஞானமுடையவன்.


---------------------------------------


3:139எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்.


-------------------------------------------------------


3:160(முஃமின்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வானானால், உங்களை வெல்பவர் எவரும் இல்லை; அவன் உங்களைக் கைவிட்டு விட்டால், அதன் பிறகு உங்களுக்கு உதவி செய்வோர் யார் இருக்கிறார்கள்? எனவே, முஃமின்களே அல்லாஹ்வின் மீதே (முழுமையாக நம்பிக்கை பூண்டு) பொறுப்பேற்படுத்திக் கொள்ளட்டும்


-------------------------------------


3:200முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!


----------------------------------------------------------------------------------------


9:40(நம் தூதராகிய) அவருக்கு நீங்கள் உதவி செய்யா விட்டால், (அவருக்கு யாதொரு இழப்புமில்லை;) நிராகரிப்பவர்கள் அவரை ஊரை விட்டு வெளியேற்றியபோது நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவி செய்தே இருக்கின்றான்; குகையில் இருவரில் ஒருவராக இருந்த போது, (நம் தூதர்) தம் தோழரிடம், “கவலைப்படாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான்” என்று கூறினார். அப்போது அவர் மீது அல்லாஹ் தன் சாந்தியை இறக்கி வைத்தான்; மேலும் நீங்கள் பார்க்க முடியாப் படைகளைக் கொண்டு அவரைப் பலப்படுத்தினான்; நிராகரிப்போரின் வாக்கைக் கீழாக்கினான்; ஏனெனில் அல்லாஹ்வின் வாக்குத்தான் (எப்போதும்) மேலோங்கும் - அல்லாஹ் மிகைத்தவன், ஞானமிக்கவன்


-------------------
21:87இன்னும் (நினைவு கூர்வீராக:) துன்னூன் (யூனுஸ் தம் சமூகத்தவரை விட்டும்) கோபமாக வெளியேறிய போது, (பாவிகள் சமூகத்தை விட்டும் வெளியேறி விட்ட படியால்) அவரை நாம் நெருக்கடியில் ஆக்கமாட்டோம் என்று எண்ணிக் கொண்டார்; எனவே அவர் (மீன் வயிற்றின்) ஆழ்ந்த இருளிலிருந்து “உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் யாருமில்லை; நீ மிகவும் தூய்மையானவன்; நிச்சயமக நான் அநியாயக்காரர்களில் ஒருவனாகி விட்டேன்” என்று பிரார்த்தித்தார்.


37:143ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் 


37:144(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.


------------------------------------------


26:61இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டபோது: “நிச்சயமாக நாம் பிடிபட்டோம்” என்று மூஸாவின் தோழர்கள் கூறினர்


26:62அதற்கு (மூஸா), “ஒருக்காலும் இல்லை! நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கிறான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்” என்று கூறினார்;.


26:63உம் கைத்தடியினால் இந்தக் கடலை நீர் அடியும்” என்று மூஸாவுக்கு வஹீ அறிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் கடல்) பிளந்தது; (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் பெரும் மலை போன்று ஆகிவிட்டது.


26:65மேலும், நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பற்றினோம்.


-------------------------------------------


21:67“சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா?” (என்று இப்ராஹீம் கூறினார்).


21:68(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார்கள்.


21:69(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) “நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!” என்று நாம் கூறினோம்.


-------------------------------------------------------------------------


21:83இன்னும், ஐயூப் தம் இறைவனிடம் “நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித் போது


21:84நாம் அவருடைய பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம்; அவருக்கு ஏற்பட்டிருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம்; அவருடைய குடும்பத்தையும், பின்னும் அதைப் போன்ற ஒரு தொகையினரையும் (அவருக்குக் குடும்பமாகக்) கொடுத்தோம் - இது நம்மிடத்திலிருந்துள்ள கிருபையாகவும் ஆபிதீன்களுக்கு (வணங்குபவர்களுக்கு) நினைவூட்டுதலாகவும் இருக்கிறது.


---------------------------------------


3:13(பத்ரு களத்தில்) சந்தித்த இரு சேனைகளிலும் உங்களுக்கு ஓர் அத்தாட்சி நிச்சயமாக உள்ளது; ஒரு சேனை அல்லாஹ்வின் பாதையில் போரிட்டது; பிறிதொன்று காஃபிர்களாக இருந்தது; நிராகரிப்போர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரைத் தங்களைப்போல் இரு மடங்காகத் தம் கண்களால் கண்டனர்; இன்னும், அல்லாஹ் தான் நாடியவர்களுக்குத் தன் உதவியைக் கொண்டு பலப்படுத்துகிறான்; நிச்சயமாக, (அகப்) பார்வையுடையோருக்கு இதில் திடனாக ஒரு படிப்பினை இருக்கிறது


3:123பத்ரு” போரில் நீங்கள் மிகவும் சக்தி குறைந்தவர்களாக இருந்த போது, அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தான்; ஆகவே நீங்கள் நன்றி செலுத்துவதற்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.


8:17(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவர்கள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.


8:41(முஃமின்களே!) உங்களுக்கு(ப் போரில்) கிடைத்த வெற்றிப் பொருள்களிலிருந்து நிச்சயமாக ஐந்திலொரு பங்கு அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும்; அவர்களுடைய பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் உரியதாகும் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, இரு படைகள் சந்தித்துத் தீர்ப்பளித்த (பத்ரு நாளில்) நாம் நம் அடியார் மீது இறக்கி வைத்த உதவியை (அல்லாஹ்வே அளித்தான் என்பதை)யும் நீங்கள் நம்புவீர்களானால் (மேல்கூறியது பற்றி) உறுதியாக அறிந்து கொள்ளுங்கள் - நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்


----------------------------------


Source : www.tamililquran.com


தொகுப்பு:  ஹசன்