Pages

Thursday 12 January 2017

Muslim Clock Music Audio

New Product Sale:

ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு ஸுரா கிராஅத் ஆடியோ மற்றும் ஹதீஸ் நினைவூட்டல் ஆடியோ

Clock Muslim Qirath Audio

காலை 6 AM - இரவு 9PM
Every one hour Audio:
அஸ்ஸலாமு அலைக்கும் + நேரம் + கிராஅத் Arabic with Tamil Translate (Or) ஹதீஸ் Tamil

இரவு 10PM - காலை 5AM Silent Mode

கீழ்க்கண்ட ஆடியோ வரிசையாக வரும் :

1. ஸூரா அல் ஃபாத்திஹா
2. ஹதீஸ் ஹிஜ்ரத் (நிய்யத்)
3. ஹதீஸ் ஈமான் 5
4. ஹதீஸ் தொழுகை ஜமாத்
5. ஹதீஸ் நன்மை தீமை
6. ஸுரா 102 பேராசை
7. ஸுரா 103 காலம்
8. ஸுரா 105  யானை
9. ஸுரா 106 அல்குரைஷ் குரைஷிகள்
10. ஸுரா 107 அற்பப் பொருட்கள்
11. ஸுரா 108 மிகுந்த நன்மைகள் அல்கவ்ஸர்
12. ஸுரா 110 உதவி
13. ஸுரா 112 ஏகத்துவம்
14. ஸுரா 113 அல்ஃபலக் அதிகாலை
15. ஸுரா 114 அந்நாஸ் மனிதர்கள்
16. ஸுரா 97 கண்ணியமிக்க இரவு
17. ஹதீஸ் பொறுமை
18. ஹதீஸ் பாவ மன்னிப்பு

Ajantha Wall Clock
Price : 1300.00

Contact : whatsapp
+919840955471


Sunday 4 October 2015

வறுமை மற்றும் வட்டி இவற்றிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும்

வறுமை மற்றும் வட்டி


இவற்றிலிருந்து விடுபட

என்ன செய்ய வேண்டும் ?

அரசியல் கட்சிகள் பிரச்சனையை தீர்க்குமா ?

அமைப்புகள் துயர் துடைக்குமா?

ஜமாதுல் உலாமா சபை செய்யுமா ?

பணம் இருப்பவர்கள் தகுதியான ஆட்களுக்கு ஜகாத் கொடுப்பார்களா ?

தீர்வு உண்டு அருமையாக அழகாக

ஆக்கப்பூர்வமான கட்டுரைகள் வரவேற்க்கப்படுகின்றன.

by

email: hasanmmk@gmail.com


Wednesday 5 August 2015

மேலப்பாளையம் சமூக மாற்றம் வேண்டும் ஏன் ?


மேலப்பாளையத்தில் எங்கெங்கு மரக்கன்று நட முடியுமோ அங்கெங்கு மரக்கன்று நட வேண்டும். இதன் மூலம் பசுமை ஆக்கலாம் ஊரை.

மக்களை ஏமாற்ற ஆர்பாட்டம் போராட்டம் தேவை தான்.
உடனடி மாற்றம் மற்றும் நீண்ட கால அடிப்படையில் மேலப்பாளையத்தில் மக்களிடம் மாற்றம் ஏற்பட ஊரில் மாற்றம் ஏற்பட சில நல்ல காரியங்களை இயக்கம் சார்ந்தோ அல்லது இயக்கம் சாராமலோ நல்ல உள்ளங்கள் செய்தாக வேண்டும்.


Friday 12 December 2014

நரகத்தை நோக்கி பெண்கள் குறும்படம் - அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம்

https://www.youtube.com/watch?v=194XpXpKbwI

சமூக அக்கறை உள்ள மிக சரியான படம் தங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை இது படம் அல்ல பாடம் இது போல் ஒரு கர்னாடகத்து முஸ்லிம் பெண்ணை தமிழ் நாட்டு விபச்சார கும்பலிடம் இருந்து மீட்ட அனுபவம் எங்களுக்கு உண்டு தங்கலின் ஊடக சேவை தொடட்டும்......ம.ஹைதர் அலி. (comments)

இது குறும்படம் அல்ல உண்மை நிகழ்ச்சியே- abdul razack (comments)

இப்படம் அனைத்து சகோதரிகளுக்கும் சமர்ப்பணம் .காதல் என்ற பெயரில் மோசடி செய்யப்படும் பெண்கள் பற்றிய குறும்படம்.- ali akbar (comments)

This film to all school & college girls and women for Must see.

Thanks to Film Production.


Thursday 20 November 2014

நீங்கள் வெற்றி அடைவீர்கள் !

2:189(நபியே! தேய்ந்து, வளரும்) பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள்; நீர் கூறும்: “அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜையும் அறிவிப்பவையாகவும் உள்ளன. (முஃமின்களே! ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உங்கள்) வீடுகளுக்குள் மேற்புறமாக வருவதில் புண்ணியம் (எதுவும் வந்து விடுவது) இல்லை; ஆனால் இறைவனுக்கு அஞ்சி நற்செயல் புரிவோரே புண்ணியமுடையயோராவர்; எனவே வீடுகளுக்குள் (முறையான)வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்; நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை, அஞ்சி நடந்து கொள்ளுங்கள்.

2:250மேலும், ஜாலூத்தையும், அவன் படைகளையும் (களத்தில் சந்திக்க) அவர்கள் முன்னேறிச் சென்ற போது, “எங்கள் இறைவா! எங்களுக்குப் பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாக! காஃபிரான இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாயாக!” எனக் கூறி(ப் பிரார்த்தனை செய்த)னர்.

2:286அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”

3:200முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரை ஒருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும், மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்!

5:90ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.