Pages

Tuesday, 21 October 2014

மஸ்ஜிதின் கனவு நனவாகுமா ? Masjid Dreams

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மஸ்ஜித் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுக்கும் மைய்யமாக இருந்தது.

முன் எப்பொழுதை விட இப்போது மக்கள் அதிகமாக திருமணம் மற்றும் பல நிகழ்ச்சிகளுக்காக வெளியூர் சென்று கலந்து கொள்கிறார்கள். அத்தகையவர்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள முதலில் நினைப்பது மஸ்ஜித்கள் தான்.

ஒவ்வொரு மஸ்ஜித்களிலும் பெண்கள் தொழுகை அறை, கழிவறை கட்டப்படவேண்டும். அவர்கள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி

அது போல சுற்றுலா தளங்களில் அமைந்துள்ள  மஸ்ஜித்களில் காலியாக உள்ள இடங்களில் தங்கும் வசதி அறை கட்டி அதை வாடகைக்கு விட்டு பணம் பார்க்கலாம். கண்ணியமான முஸ்லிம் பெண்கள் ஆண்கள் பயமின்றி தங்குவார்கள்.

தகவல் தொடர்பு கட்டமைப்பு அதி நவீனமாகயுள்ள இந்த கால கட்டத்திலும் இன்னும் பெரும்பாலான ஏழ்மை மக்கள் அதனை பயன்படுத்தி வேலைவாய்ப்புகளையோ அல்லது இன்னபிற வாழ்வியல் தேவைகளையோ பூர்த்தி செய்வது எட்டாகனியாக உள்ளது. அத்தகையவர்களுக்கு மஸ்ஜித்களிலேயே ஒரு இடம் ஒதுக்கி அவர்களின் தேவையை பூர்த்தி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அதை சேவையாகவும் செய்யலாம் அல்லது அதற்குரிய கட்டணமும் பெற்று கொள்ளலாம்.

மஸ்ஜித்களை சுற்றியுள்ள முஹல்லாவாசிகள் பயோ டேட்டா மஸ்ஜித் நிர்வாகிகளிடம் இருக்க வேண்டும். போரா முஸ்லிம்களிடத்தில் இருக்கும் சிஸ்டமேடிக் போல நம்மிடத்தில் மஸ்ஜித் மூலமாக ஆட்கள் நியமிக்கப்பட்டு ஜகாத் பணம் முறையாக கணக்கிடப்பட்டு இருப்பவர்களிடம் வாங்கி இல்லாதவர்களிடத்தில் கொடுக்க  வேண்டும்.

பள்ளிவாசலில் ஆலோசனை பெட்டி அல்லது புகார் பெட்டி வைக்கலாம். அதன் மூலம் பொருளுதவி தேவைப்படுபவர்கள் அதில் குறைகளை தன் தேவைகளை எழுதி போடலாம். நிர்வாகம், வசதி உடையவர்களிடம் கூறி பெற்று கொடுக்கலாம்.

ஆனால் இன்று ஏழைகளுக்கு சேரவேண்டிய ஜகாத் பணமானாலும் சரி, குர்பானி தோல் பணமானாலும் சரி இயக்கங்கள் அதை வாங்கி தின்று கொண்டு இருக்கின்றன

24 மணி நேரமும் மஸ்ஜித்கள் மக்களுக்காக செயல்பட வேண்டும்.

மஸ்ஜித்களில் மருத்துவ முகாமோ அல்லது தினமும் மருத்துவ சேவை அளிப்போ செய்யலாம்.

மஸ்ஜித்களை அலங்கரியுங்கள் அல்லாஹ்வை வணங்குவதை கொண்டும், மக்களுக்கு  சேவை செய்வதை கொண்டும். மக்களை மஸ்ஜித்இன் பால் ஈர்ப்பு ஏற்படுத்துங்கள்.

இரண்டு பெருநாள் தினங்களை முன்னிட்டு  ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனி தனியாக திருகுரான் மனன போட்டியோ, மார்க்க சம்பந்தமான போட்டியோ அறிவு சம்பந்தமான போட்டியோ அல்லது விளையாட்டு போட்டியோ வைத்து பரிசு கொடுத்து உற்சாகம் மூட்டுங்கள்.

இதன் மூலம் இஸ்லாமிய கலாசாரத்தை சகோதரத்துவத்தை கட்டமைப்பு செய்யலாம்

சமூக மாற்றம் நாம் தான் ஏற்படுத்த வேண்டும், தகவலை பரப்புவது மாற்றத்தை ஏற்படுத்தாது, சேவை ஆற்றுவோம், வரும் தலைமுறையை தலைநிமிர்ந்து நிற்க வைப்போம்

இன்ஷா அல்லாஹ்








No comments:

Post a Comment