Pages

Tuesday, 29 May 2012

மாதம் ஒரே ஒரு ரூபாய் ஒரு நபர் வீதம் - தலைகீழ் மாற்றம் இன்ஷா அல்லாஹ்

மாதம் ஒரே ஒரு ரூபாய்,  ஒரு நபர் வீதம் கொடுங்கள்.

சமுதாயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படும் 

இன்ஷா அல்லாஹ்....
  

நீங்கள் மாதம் ஒரு ரூபாய் ஒரு நபர் வீதம் கொடுங்கள்.
வீட்டிற்கு வீடு எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ,   
தலைக்கு ஒரே ஒரு ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் 
கணக்கிட்டு கொடுங்கள். 

அதன் மூலம் பல சமுதாய பணிகளை செய்யலாம். 

அதை எந்த அரசியல் கட்சிகளிடம் கொடுத்து விடாதீர்கள்.

ஜமாத்தார்விடமோ அல்லது இதற்கென அறக்கட்டளை 
ஏற்படுத்தி பணிகள் ஆற்றலாம்.

உதாரணத்திற்கு :

1. வட்டியில்லாத கடன் கொடுக்கலாம்.
    ( வட்டியில் மூழ்கி முத்து கிடைக்கும் என்று மூர்ச்சையாகி மரணித்து 
    கிடக்கும் சமுதாயத்தை மீட்டெடுக்கலாம்)             
2. பள்ளிவாசலுக்கு ஜெனேரட்டேர்,  நல்ல ஒலி அமைப்பு  வசதி மற்றும் 
    என்ன வசதிகள் தேவையோ அனைத்தையும் செய்யலாம்.
    பள்ளிவாசலில் தகவல் தொடர்பு மையம் அமைக்கலாம்
    பள்ளிவாசலில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தலாம் 
3. வசதி இல்லாத குழந்தைகளுக்கு படிப்பு செலவு 
4. முக்கிய தேவையான மருத்துவமனை அமைத்தல் 
5. ஆண்கள்பெண்களுக்குகென தனி நூலகம் அமைத்தல் 
6. ஊருக்கென சமுதாய நல கூடம் அமைத்தல் 
7. தெருவுக்கு ஒரு டாக்டர் என படிக்க வைக்கலாம்
8. ஊர் சார்பாக தொழிற்சாலை நிறுவலாம்  
9.  வீட்டிற்கு வீடு  சோலார் மின் வசதி அமைத்தல்
10. பள்ளிக்கூடம் மற்றும் மதரசா அமைத்தல் 

இன்னும் ஏராள பணிகள் நம் கண் முன்...... 
ஆனால் நாமோ?

விறகை நெருப்புத் தின்று விடுவதைப் போல பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது , எனவே எச்சரிக்கையாக இருங்கள் - 
என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள். நூல் :அபூதாவூத் 

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், 
அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு 
சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - 
அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. 
அல்குர் ஆன் 13:11


சொந்த பிள்ளைகளையே தட்டழியை விடகூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. நம்முடைய வருங்கால சந்ததிகளையே 
நாம் தட்டழியை விட்டால் ,  ?!.....

No comments:

Post a Comment