நோன்பு பெருநாளை
வெகு விமர்சையாக கொண்டாடுவோம்.
அஸ்ஸலாமு அழைக்கும்
நபி ஸல் அவர்களின் பிறந்த நாளை நாமெல்லாம் விழாவாக ஊர்
முழுக்க வட்டார வாரியாக சாப்பாட்டு சமைத்து மகிழ்ச்சியாக இருந்ததை
போல வரும் நோன்பு பெருநாளையும் வெகு விமர்சையாக
கொண்டாடுவோம்.
நோன்பு முழுக்க தெரு மாணவர்களிடையே குரான் கிராத் போட்டி,
அதான் (பாங்கு) கூறும் போட்டி, குரான் வினா விடை போட்டி, குரான்
வசனங்கள் ஒப்பித்தல் போட்டி ஆகிய வற்றை நடத்தி பெருநாள்
அன்றைக்கு பரிசு வழங்கலாம்.
தெரு வாரியாக (சிறுமிகள் ,கன்னி பெண்கள், கல்யாணம் ஆன
பெண்கள் என்று தனி தனியே அவர்களிடையே மார்க்கத்தை எவ்வாறு
மேலும் பற்றுதலுடன் பின் பற்ற வேண்டும் அதுக்கு ஏற்றவாறு
போட்டிகள் அமைய வேண்டும்) பெண்களிடையே போட்டி நடத்தி பரிசு
வழங்கலாம்.
பெருநாள் அன்றைக்கு பெண்கள் சமையலுக்கு விடுமுறை அளித்து
ஊர் முழுக்க சமைத்து சாப்பிட்டு சந்தோசமாக இருப்போம்.
குரான் இறங்கிய மாதத்தில் குரானை அனைத்து மக்களுக்கும்
சென்றடைய இந்த வழிமுறையை பின்பற்றலாமா ?
- ஹஸன், மேலப்பாளையம்
No comments:
Post a Comment