தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், சேர இயலாத ஏழை மாணவர்கள் இலவசக் கல்வி உதவித் தொகை பெறலாம்.
இதுகுறித்து தஞ்சை மாவட்டம், பாபநாசத்திலுள்ள இராஜகிரி தாவூத் பாட்சா கலை அறிவியல் கல்லூரித் தலைவர் எம்.ஏ. தாவூத் பாட்சா தெரிவித்தது:
தமிழகத்திலுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர அனுமதி கிடைத்தும், பொருளாதார வசதியின்மை காரணமாக சேர இயலாத அனைத்து மாணவர்களுக்கும், எங்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்புக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள கல்விக் கட்டணம், ஐந்தாண்டுகளுக்கும் இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும்.
இந்த உதவித் தொகையால் எதிர்காலத்தில் மருத்துவராவோர் மூலம், பொதுமக்களுக்குச் சிறப்பான சேவை கிடைக்கும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.எனினும், படிக்கும் காலத்தில் பல்கலை.
தேர்வில் ஏதாவதொரு பாடத்தில் தோல்வியுற்றாலும், அதன்பின்னர் உதவித் தொகை நிறுத்தப்படும்.உதவித் தொகை பெற விரும்புவோர்,
தலைவர் மற்றும் செயலர்,
ஆர்.டி.பி. கலை, அறிவியல் கல்லூரி,
பாபநாசம்-614 205, தஞ்சை மாவட்டம்
என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
தொலைபேசி: 04374-222123, 221267, 9443151267
103:1. காலத்தின் மீது சத்தியமாக! 103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். 103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). - அல்குர்ஆன்
Wednesday, 20 July 2011
Wednesday, 13 July 2011
27. கட்டிட நிர்மான கலை படிப்பு (B.Arch)
கட்டிட நிர்மான கலை படிப்பு (B.Arch)
B.Arch (கட்டிட நிர்மான கலை) படிப்பு தற்போது பெரும்பாலான மாணவர்களின் விருப்பபடிப்பாக மாறிவருகின்றது.
தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது.
அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்தபடுகின்றன.
தமிழகத்தில் 12 கல்லூரிகளில் மட்டும்தான் இந்த படிப்பு உள்ளது.
அதில் 2 கல்லூரிகள் (சென்னை புது கல்லூரி, கீழகரை சதக் கல்லூரி)முஸ்லீம்களால் நடத்தபடுகின்றன.
B.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருட வருடம் கலந்தாய்வு(counseling) நடத்துகின்றது. அதற்க்கான விண்ணப்பம் தற்போது விணியோகிக்கப்பட்டுவருகின்றது, விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில்மட்டும்தான் கிடைக்கும்.
விண்ணப்பத்தை பெறுவதற்க்கு NATA தேர்வில் தேர்சி பெற்று இருக்கவேண்டும். NATA தேர்வின் முழுவிபரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. NATA தேர்வின்மதிப்பெண் சான்றிதழுடன் (Score card) சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைகழகத்திற்க்கு சென்று விண்ணப்பத்தை பெற வேண்டும்
.
B.Arch கலந்தாய்வு (counseling) முறை :
+2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ன்னையும், NATAதேர்வில் எடுத்த மதிப்பெண்ணையும் வைத்து கட் ஆப் மதிப்பெண் கணக்கிட படுகின்றது.அதாவது +2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண்ணை 6 - ஆல் வகுத்துகொள்ள வேண்டும்,அதனுடன் NATA தேர்வின் மதிப்பெண்ணை கூட்டினால் வருவதுதான் B.Arch கட் ஆப்மதிப்பெண். இது 400 மதிப்பெண்ணுக்கு இருக்கும்
உதாரணத்திற்க்கு ஒரு மாணவர் +2 தேர்வில் 1050 மதிப்பெண்னும், NATA தேர்வில் 130மதிப்பெண்னும் எடுத்து இருந்தால், அவரின் கட் ஆப் மதிப்பெண் 305 ஆகும்
.
இந்த கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தர வரிசை பட்டியல் (Rank list) தயாரிக்கப்பட்டுமாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள். இந்த B.Arch கலந்தாய்வில்முஸ்லீம்களுக்கு 3.5 % இட ஒதுக்கீடு உள்ளது
.
NATA (National Aptitude Test in Architecture) தேர்வு
இது ஒரு கட்டிட நிர்மான கலை திறன் ஆய்வு தேர்வாகும். இதை எழுதுவதர்க்கு தமிழகத்தில்15 மையங்கள் உள்ளன. அங்கு சென்று NATA தேர்வு எழுத நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும்.பதிவு செய்து ஒருவாரம் அல்லது 10 நாளில் தேர்வு எழுதலாம். தேர்வு கட்டணம் ரூ.800 . தேர்வுஎழுதிய ஒரு நாளில் மதிப்பெண் சான்றிதழ் (Score card)வழங்கப்படும்.
இந்த தேற்விற்க்குதயாராவதற்க்கு புத்தகங்கள் உள்ளன. இந்த தேர்வு எழுதுவதற்க்கு பயிற்சியும்அளிக்கப்படுகின்றது, ஆனால் பயிற்சி கட்டணம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை இருக்கும்.
NATA தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. ஒன்று Online தேர்வு 100 மதிப்பெண் கொண்டது, (Chose the best answer type) மற்றொன்று வரைதல் தேர்வு (Drawing Test) 100 மதிப்பெண் கொண்டது. மொத்தம் 200 மதிப்பெண், இரண்டு தேர்விலும் சேர்த்து குறைந்தது 80 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும். 80 -க்கும் குறைவாக மதிபெண் எடுத்தால் மீண்டும் இந்த தேர்வை எழுதலாம்.ஆனால் அதிக பட்சமாக 3 முறைக்கு மேல் எழுத முடியாது.
அதாவது மூன்று முறை NATAதேர்வு எழுதி 80 மதிப்பெண் எடுக்காவிடால் நடப்பு ஆண்டில் (Current year) B.Arch படிக்க முடியாது.அடுத்த ஆண்டில் தேர்வு எழுதி படிக்கலாம்.
NATA தேர்வு எழுத தமிழகதில் உள்ள 15 மையங்கள்மற்றும் NATA தேர்வு பற்றிய இதர விபரங்கள் இந்த www.nata.in இணையதளத்தில் உள்ளன
.
.
S.சித்தீக்.M.Tech
----------------------------
College Addresses :
College Addresses :
http://www.indiaedu.com/tamilnadu/colleges/architecture/
Subscribe to:
Posts (Atom)