Pages

Thursday 31 May 2012

துபை ஈமான் அமைப்பின் உயர் கல்வி உதவித் திட்டம்


துபை இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான் www.imandubai.com
இன்ஷா அல்லாஹ் வழக்கம் போல் இவ்வாண்டும் உயர்கல்விக்கு உதவித்தொகை வழங்க உள்ளது.
 
2012 ஆம் ஆண்டு S.S.L.C. மற்றும் +தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்துமேற்படிப்பைத் தொடர வசதியற்றதிறமையும் ஆர்வமும் மார்க்கப் பற்றுள்ள மாணவ மாணவியர்கள் கலை/அறிவியல்மருத்துவம்பொறியியல்,தொழில்நுட்ப பட்டயம் / பட்டப்படிப்புத் திட்டத்திற்கு வரவேற்கப்படுகின்றனர்.
 
JOURNALISM (இதழியல்), I.A.S., (இந்திய ஆட்சிப் பணி), I.P.S.,போன்ற படிப்பில் சேர்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் ஈமான் கல்விக்குழுவின் பரிந்துரைப்படி உதவித்தொகை (SCHOLARSHIP) வழங்கப்படும்.

தேர்வு முடிவுகள் வெளியான பின்னர்
i.         மதிப்பெண் சான்றிதழ் நகல்
ii.        மாணவ மாணவியர் பெயர்
iii.       பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
iv.       பிறந்த தேதி
v.        முழு முகவரி தொலைபேசியுடன்
vi.       பெற்றோர் பெயர்
vii.      தொழில் மற்றும் மாத வருமானம்
viii.       குடும்பம் பற்றிய தெளிவான சிறு குறிப்பு
ix.        ஜமாஅத் பரிந்துரை கடிதம்
உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய விண்ணப்பித்தை IMAN EDUCATIONAL SCHOLARSHIP COUNCIL என்று தலைப்பிட்டு கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பத்தை www.imandubai.com எனும் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம்.
INDIAN MUSLIM ASSOCIATION ( IMAN )
P O BOX NO. 13302
DUBAI – U.A.E.
 
கடைசி தேதி : 30 ஜுன் 2012

குறிப்பு : 

விண்ணப்பத்தை அஞ்சலில் மட்டுமே அனுப்பவும்

விண்ணப்பத்தை பதிவு அஞ்சல் ( Registered Post ) மற்றும் மின்னஞ்சல் 
( E-mail ) அனுப்ப வேண்டாம்.


தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை

Tamilnadu MINORITIES Welfare Department 

SCHOLARSHIP 2012 
அஸ்ஸலாமு அலைக்கும்
இத்துடன் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள
கல்வி உதவித்தொகை விவரம் இணைக்கப்பட்டுள்ளது

தங்களது பகுதியிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இச்செய்தி
சென்று சேர ஏற்பாடு செய்யுங்கள்

Ministry of Minority Affairs - Government of India:
Website: www.minorityaffairs.gov.in

Website: www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm
Email: tnminoritieswelfare@yahoo.com

Tamilnadu Minorities Welfare Department
807, 5th Floor, Anna salai
Chennai - 600 002.
Tamilnadu
Phone: 044 28520033



Tuesday 29 May 2012

மாதம் ஒரே ஒரு ரூபாய் ஒரு நபர் வீதம் - தலைகீழ் மாற்றம் இன்ஷா அல்லாஹ்

மாதம் ஒரே ஒரு ரூபாய்,  ஒரு நபர் வீதம் கொடுங்கள்.

சமுதாயத்தில் தலைகீழ் மாற்றம் ஏற்படும் 

இன்ஷா அல்லாஹ்....
  

நீங்கள் மாதம் ஒரு ரூபாய் ஒரு நபர் வீதம் கொடுங்கள்.
வீட்டிற்கு வீடு எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ,   
தலைக்கு ஒரே ஒரு ரூபாய் வீதம் ஒவ்வொரு மாதமும் 
கணக்கிட்டு கொடுங்கள். 

அதன் மூலம் பல சமுதாய பணிகளை செய்யலாம். 

அதை எந்த அரசியல் கட்சிகளிடம் கொடுத்து விடாதீர்கள்.

ஜமாத்தார்விடமோ அல்லது இதற்கென அறக்கட்டளை 
ஏற்படுத்தி பணிகள் ஆற்றலாம்.

உதாரணத்திற்கு :

1. வட்டியில்லாத கடன் கொடுக்கலாம்.
    ( வட்டியில் மூழ்கி முத்து கிடைக்கும் என்று மூர்ச்சையாகி மரணித்து 
    கிடக்கும் சமுதாயத்தை மீட்டெடுக்கலாம்)             
2. பள்ளிவாசலுக்கு ஜெனேரட்டேர்,  நல்ல ஒலி அமைப்பு  வசதி மற்றும் 
    என்ன வசதிகள் தேவையோ அனைத்தையும் செய்யலாம்.
    பள்ளிவாசலில் தகவல் தொடர்பு மையம் அமைக்கலாம்
    பள்ளிவாசலில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடத்தலாம் 
3. வசதி இல்லாத குழந்தைகளுக்கு படிப்பு செலவு 
4. முக்கிய தேவையான மருத்துவமனை அமைத்தல் 
5. ஆண்கள்பெண்களுக்குகென தனி நூலகம் அமைத்தல் 
6. ஊருக்கென சமுதாய நல கூடம் அமைத்தல் 
7. தெருவுக்கு ஒரு டாக்டர் என படிக்க வைக்கலாம்
8. ஊர் சார்பாக தொழிற்சாலை நிறுவலாம்  
9.  வீட்டிற்கு வீடு  சோலார் மின் வசதி அமைத்தல்
10. பள்ளிக்கூடம் மற்றும் மதரசா அமைத்தல் 

இன்னும் ஏராள பணிகள் நம் கண் முன்...... 
ஆனால் நாமோ?

விறகை நெருப்புத் தின்று விடுவதைப் போல பொறாமை உங்களின் நற்செயல்களை அழித்துவிடுகிறது , எனவே எச்சரிக்கையாக இருங்கள் - 
என நபி (ஸல் )அவர்கள் கூறினார்கள். நூல் :அபூதாவூத் 

எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையயைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், 
அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை; இன்னும் அல்லாஹ் ஒரு 
சமுதாயத்தாருக்குத் தீவினையை நாடினால், அதைத்தடுப்பவர் எவருமில்லை - 
அவர்களுக்கு அவனைத்தவிர துணை செய்வோர் எவரும் இல்லை. 
அல்குர் ஆன் 13:11


சொந்த பிள்ளைகளையே தட்டழியை விடகூடாது என்று இஸ்லாம் கூறுகிறது. நம்முடைய வருங்கால சந்ததிகளையே 
நாம் தட்டழியை விட்டால் ,  ?!.....