Pages

Tuesday, 28 February 2012

57 தமிழக அரசின் சமச்சீர் கல்வி மாதிரி வினாத்தாள்

தமிழக அரசின் சமச்சீர் கல்வி மாதிரி வினாத்தாள்

http://www.tn.gov.in/schooleducation

பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை

http://www.samacheerkalvi.in/10th_Model_Question_Paper.php

By

என்றும் மக்கள் நலப்பணியில்


Hasan

MEERA SOCIAL TRUST (MST)
MELAPALAYAM IMPROVEMENT TRUST (MIT)
MELAPALAYAM - 627005

E-mail: hasanmmk@gmail.com



Monday, 27 February 2012

56. ஷஹீத் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) அவர்களின் பத்து அறிவுரைகள்

ஷஹீத் இமாம் ஹசனுல் பன்னா (ரஹ்) 
அவர்களின் பத்து அறிவுரைகள்
படியுங்கள்! சிந்தியுங்கள்!! செயல்படுங்கள் !!!

1. எந்தச் சந்தர்ப்பமாயிருந்தாலும் பாங்கொலி கேட்டவுடன் தொழுகைக்காக எழுந்து செல்லுங்கள்.

2. அல்குர்ஆனை ஓதுங்கள்; அல்லது அதனைச் செவிமடுங்கள்; அல்லது அல்லாஹ்வை திக்ர் செய்யுங்கள். உங்களது நேரத்தின் ஒரு பகுதியைக் கூட பயனின்றிக் கழித்துவிடாதீர்கள்.

3. அரபி மொழியைக் கற்பதற்கும் பேசுவதற்கும் முயற்சி செய்யுங்கள். ஏனெனில், அது இஸ்லாத்தின் மூலாதார நூல்களின் மொழியாகும்.

4. எந்தவொரு விஷயத்திலும் தர்க்கம் புரியாதீர்கள். ஏனெனில், தர்க்கம் புரிவதால் எந்த நன்மையும் விளையாது.

5. அதிகமாகச் சிரிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வுடன் தொடர்புள்ள மனிதன் எப்போதும் அமைதியாகவும் கண்ணியமாகவுமே நடந்து கொள்வான்.

 6. யாரையும் பரிகாசம் செய்யாதீர்கள். ஏனெனில், வெற்றியை இலக்காகக் கொண்ட சமூகம், எதையும் இலக்கோடுதான் பார்க்கும்.

7. தேவையைவிட அதிகமாகக் குரலெழுப்பாதீர்கள். அது பிறருக்கு விகார மாகவும் தொல்லையாகவுமே இருக்கும்.

8. தனிமனிதர்களைப் பற்றிப் புறம் பேசுவதையும் அமைப்புகளைக் குறை கூறுவதையும் தவிர்த்துக்கொள்ளுங்கள். நல்லவற்றைத் தவிர வேறெதையும் பேசாதீர்கள்.

9. நீங்கள் சந்திக்கின்ற ஒவ்வொரு சகோதரருடனும் அறிமுகமாகிக் கொள்ளுங்கள். அவர்கள் அதனை உங்களிடம் எதிர்பார்க்காவிட்டாலும் சரியே. ஏனெனில், நமது அழைப்புப் பணியின் அடிப்படையே பரஸ்பர அறிமுகம்தான்.

10. நேரத்தைவிட கடமைகள் அதிகம். பிறர் தமது நேரத்தைப் பயனுள்ளதாக்க உதவுங்கள். பிறரிடம் உங்களுக்கு ஏதாவது தேவையிருந்தால் அதைச் சுருக்கமாக முடித்துக்கொள்ளுங்கள்


Hasan Al Banna Slogan in Tamil

Saturday, 4 February 2012

55. VERGAL PUBLISH BOOKS CHENNAI



VERGAL PUBLISH BOOKS CHENNAI
VERGAL PATHIPPAGAM


AFGANISTAN MUJAHIT HISTORY
MALCOM X
PARLIMENT ATTACK
ZAINAB AL KAZZALI
SENTAMIL NATTU CHERIKAL
KADAVULAI MATRUVOAM
SAATHI OLINTHATHU
NAAM PRINTHU VIDA VENDAAM
NEETHIPATHIYIN VIDUTHALAI MULAKKAM
TALIBAN PIDIYIL YVONNE RIDLEY
KARKARE KOLAI SEITHATHU YAAR

Wednesday, 1 February 2012

54. திட்டமிடல் மூலம் நமது சமூகத்தை பலப்படுத்துவோம்

திட்டமிடல் மூலம் 

நமது சமூகத்தை பலப்படுத்துவோம்

மீண்டும் ஒரு இஸ்லாமிய புதுவருடத்தை எதிர்நோக்கியிருக்கிறோம். முஹர்ரம் என்றவுடன் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட ஹிஜ்ரத்தும், அதனையொட்டி மேற்கொள்ளப்பட்ட அவரது ஆழ்ந்த திட்டமிடலும்தான் எப்போதும் எமது நினைவுக்குவரும்.


அந்தவகையில் இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கான சிறந்த மூல உபாய திட்டமிடல் குறித்து சிந்திக்கத் தலைப்பட வேண்டும். உடனடியாக நம்மால் அவ்வாறான ஒரு திட்டத்தை வரைய முடியாவிட்டாலும் கூட, முதல் கட்டமாக அதனை குறைந்தபட்சம் ஒரு பேசுபொருளாகவேனும் மாற்ற வேண்டும். 


எல்லா மாற்றத்திற்குமான முதல்படி, அது பற்றிய விழிப்புணர்வை பரவலாக ஏற்படுத்துவதுதான். அந்தவகையில் சமீபகாலமாக இந்த விடயம் தொடர்பாக ஓரளவு கவனம் செலுத்தப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது. 


திட்டமிடல் கலாச்சாரம் எம்மிடையே நன்கு வலுப்பெறவில்லை. முஸ்லிம் பாடசாலைகள் கூட இப்பொழுதுதான் ஓரளவுக்கு திட்டமிடல் பற்றி சிந்திக்கின்றன; சில ஆரம்ப எட்டுகளை வைத்துள்ளன. 


எமது பெரும்பாலான சமூக நிறுவனங்களுக்கு முறையான திட்டங்கள் எதுவுமில்லை. அவற்றுள் சிறுகுழு அல்லது  தனிமனித ஆதிக்கமே நிலவி வருகிறது. இந்த நிலையை கூடிய விரைவில் இல்லாதொழிக்க வேண்டும்.

எல்லோரும் ஒன்றுபடும் குறைந்தபட்ச பொதுப்

புரிதலின் அடிப்படையிலான திட்டங்கள்

வரையப்பட வேண்டும். இதுதான் நாம் 

முன்னேறுவதற்கான வழி.


இலங்கையின் மிகப் பின்தங்கிய சமூகங்களுள் ஒன்றான மலையகத் தமிழர்களது கல்வி தொடர்பான ஒரு வேலைத் திட்டம் 10 வீடுகளுக்கு ஒரு பட்டதாரியை உருவாக்குதல் என்பதாகும். எவ்வளவு சிறிய - ஆனால் மிகத் தெளிவான - இலக்கு இது. 

எமது சமூகத்திடம் இதுபோன்ற திட்டங்கள் உள்ளனவா என்று கேட்டால் அதற்கான பதில் எம்மிடமில்லை. 


முஸ்லிம் சமூகத்தை பல முனைகளில் வலுவூட்ட வேண்டியுள்ளது. அந்தவகையில்தான் எமது சமூகத்தின் மூல உபாய இலக்கு குறித்து நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.


நமது சமூகப் பிரச்சினைகள் தொடர்பாக பலரும் மணித்தியாலக் கணக்கில் பேசுவதை நேர்ப்பேச்சிலும் கூட்டங்களிலும் அடிக்கடி கண்டும் கேட்டும் வருகிறோம். 


ஆனால், பிரச்சினைகளைப் பேசும் அளவுக்கு தீர்வுகளை நோக்கி நாம் போவதில்லை.  


இது ஏன்? எமது சமூகத்தினரிடையே நேர்-மைய சிந்தனைப் பாங்கை விட, எதிர்மறையான சிந்தனைப் போக்கே ஆதிக்கம் செலுத்துகிறது. எம்மில் பலருக்கு எதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் அறவே அல்லது போதிய தெளிவுகள் இல்லை. 


இந்த நிலையை மாற்றியமைப்பதற்கான முயற்சியை நாம் இப்போதிருந்தே தொடங்க வேண்டும். ஏற்கனவே, நாம் இந்த விடயத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம். எம்மைச் சூழவுள்ள சமூகங்களும் அதிகார மையங்களும் இந்த விடயத்தில் எவ்வளவோ தூரத்திற்கு முன்னே சென்று விட்டன. 

பின்தங்கிய சமூகமாக நாம் இனியும் இருப்பதா

நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட திட்டமிடலால் பலப்படுத்தப்பட்ட, விளைவுகளால் பயன்பெற்ற சமூகமாக நமது சமூகத்தை
மாற்றுவதற்கான பணியை இந்தக் கணத்திலிருந்தே 
தொடங்குவோம்.
-ஆசிரியர் பக்கம்

8:53“ஏனெனில், எந்த ஒரு சமுதாயமும் தன் உள்ளத்திலுள்ள (போக்குகளை) 
          மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய 
          அருட்கொடைகளை மாற்றிவிடுவதில்லை - நிச்சயமாக அல்லாஹ்
          (எல்லாவற்றையும்) செவியுறுபவனாகவும், (யாவற்றையும்) 
          நன்கறிபவனாகவும் இருக்கின்றான்
http://www.tamililquran.com


மாற்றம் தானாக வருவதில்லை, 


அதை நாம் தாம் வரவழைக்க வேண்டும் 




---------------------------


MELAPALAYAM IMPROVEMENT TRUST
MELAPALAYAM
TIRUNELVELI DISTRICT
PINCODE : 627005